'ஓடுற பைக்கில்'...'காதல் ஜோடி' செஞ்ச செயல்'...அதிர்ச்சியை கிளப்பியிருக்கும் வீடியோ !

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆபத்தான முறையில் பைக்கின் முன்புறம் அமர்ந்து காதல் ஜோடி முத்தமிட்டு கொண்ட சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சினிமாக்களில் தான் ஹீரோக்கள் காதலியை பைக்கின் முன்னால் அமர வைத்துக் கொண்டு,சாகசம் செய்கிறேன் என்ற பெயரில் பல கற்பனை விஷயங்கள் இடம் பெற்றிருக்கும்.ஆனால் டெல்லியில் நடை பெற்றிருக்கும் சம்பவம் அந்த காட்சிகளையெல்லாம் மிஞ்சும் அளவிற்கு இருக்கிறது.டெல்லி எப்போதுமே போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் போன நகரம்.அவ்வாறு போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை ஒன்றில் பெண் ஒருவர் பைக்கின் முன்புறம் திரும்பி அமர்ந்து கொண்டு காதலனுக்கு முத்தம் கொடுத்து கொண்டு வருகிறார்.

காதலனும் முத்தம் கொடுத்து கொண்ட வருகிறார்.இதனை சாலையில் சென்று கொண்டிருந்த ஒருவர் வீடியோ எடுத்து பதிவிட அது சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.காதல் ஜோடியின் இந்த ஆபத்தான மற்றும் அநாகரீகமான செயலுக்கு பலரும் தங்களின் கண்டனங்களை பதிவிட்டு வருகிறார்கள்.இது போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கடுமையாக தெரிவித்து வருகிறார்கள்.

இதனிடையே டெல்லி காவல் உயர்அதிகாரி ஒருவரும் அந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.வீடியோவில் பதிவாகியிருக்கும் காட்சிகளை வைத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட காதல் ஜோடியை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

இவர்கள் மீது போக்குவரத்து விதிமீறல் 279 பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த பிரிவின் கீழ் அவர் வாகனம் ஓட்டுவதற்கு தடைவிதிக்கப்படும். மேலும் 6 மாத காலம் சிறைதண்டனையும், 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிகிறது.

TWITTER, DELHI, DELHI COUPLE, KISSING ON BIKE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்