இந்தியாவின் COVAXIN!.. வெற்றிகரமாக டெல்லி நபருக்கு செலுத்தி முதல் பரிசோதனை!.. எய்ம்ஸ் மருத்துவர்கள் பெருமிதம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் தயாரான கொரோனா தடுப்பு மருந்து 'கோவேக்சின்' முதன்முறையாக டெல்லியை சேர்ந்த நபருக்கு செலுத்தி பரிசோதனை தொடங்கியது.
கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்து கண்டறியும் பணியில் பல்வேறு உலக நாடுகள் ஈடுபட்டு உள்ளன. இந்த பணியில் ஈடுபட்டுள்ள இந்தியாவும் 'கோவேக்சின்' என்ற தடுப்பு மருந்து ஒன்றை கண்டறிந்து உள்ளது.
இந்த தடுப்பு மருந்து மனிதருக்கு செலுத்தி பரிசோதனை செய்த பின்பு கிடைக்கும் முடிவுகளுக்கு ஏற்ப விற்பனைக்கு அனுமதி அளிக்கப்படும். உலக மக்களின் நன்மைக்கான இந்த பரிசோதனைகளுக்காக 3,500 பேர் வரை, முன்வந்து தங்களது பெயரை எய்ம்ஸ் மருத்துவமனையில் பதிவு செய்துள்ளனர்.
இதற்காக 2 கட்டங்களாக பரிசோதனை நடைபெறும். டெல்லி எய்ம்ஸ் தவிர்த்து, பாட்னா எய்ம்ஸ் மற்றும் பிற இடங்களிலும் பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளன. இதன் ஒரு பகுதியாக, உள்நாட்டிலேயே தயாரான கொரோனாவுக்கான தடுப்பு மருந்து 'கோவேக்சின்' முதன்முறையாக டெல்லியை சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவருக்கு இன்று செலுத்தப்பட்டு உள்ளது.
அவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் உடல் வெப்பம் உள்ளிட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன. அவரது உடல் ஆரோக்கியம் சீராக இருந்துள்ளது. அவருக்கு உடலில் வேறு பாதிப்புகளோ அல்லது இதற்கு முன்பே பாதிப்புகளுடனான வியாதிகளோ இல்லை என உறுதி செய்யப்பட்டது.
டெல்லி நபருக்கு தடுப்பு மருந்து செலுத்திய பின்னர் 2 மணிநேரம் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். இதில், உடனடி பக்க விளைவுகள் எதுவும் கண்டறியப்படவில்லை. அவர் ஒரு வாரம் வரை மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்படுவார் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'யாராவது டிரீட்மென்ட் பாருங்க ப்ளீஸ்'... 'உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடிய குடும்பம்'... அரசு மருத்துவருக்கு நேர்ந்த அவலம்!
- சொந்த ஊர் திரும்பிய 'தொழிலாளர்களுக்கு'... ரூபாய் 1 லட்சம் கடன் வழங்கும் 'தமிழக' மாவட்டம்... இதை மட்டும் செஞ்சா போதும்!
- அடேங்கப்பா! 15% சம்பள உயர்வால்... 'மகிழ்ச்சி'யில் திளைக்கும் 8.5 லட்சம் ஊழியர்கள்!
- தூத்துக்குடியில் மேலும் 415 பேருக்கு கொரோனா!.. தென் மாவட்டங்களில் அதிவேகத்தில் பரவும் தொற்று!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- கொரோனாவுல இருந்து மீண்டவங்க... 'கட்டாயம்' இதெல்லாம் பண்ணனும்: சுகாதாரத்துறை
- தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 6,472 பேருக்கு கொரோனா உறுதி!.. பலி எண்ணிக்கை உச்சம் தொட்டது!.. முழு விவரம் உள்ளே!
- வீட்டு வேலை செய்யும் பெண்ணுக்காக... வீடு வீடாகச் சென்று வேலை தேடும் காவல் அதிகாரி!.. சென்னையில் பரபரப்பு!.. என்ன நடந்தது?
- 50 பேர்... 0.5 மிலி... தமிழகத்தில் இன்று முதல் COVAXIN பரிசோதனை ஆரம்பம்!.. மருத்துவர்கள் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
- 'ரஜினிகாந்த் இ-பாஸ் வாங்கினார்'... 'இ-பாஸில் குறிப்பிடப்பட்டிருந்த காரணம்'... மாநகராட்சி விளக்கம்!
- 'அவ தான் எங்க மகராசி'...'கொரோனா இருக்குமோன்னு செக் பண்ண போனா'... 'நொறுங்கிப் போன பெற்றோர்'... 'சென்னையில் நடந்த சோகம்!