இந்தியாவில் தீவிரமடையும் 'கொரோனா' ... 'பள்ளிகள்' முதல் 'திரையரங்குகள்' வரை ... டெல்லி முதல்வரின் புதிய அறிவிப்பு

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருவதையொட்டி டெல்லியிலுள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் சினிமா திரையரங்குகள் அனைத்தும் மூடப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் தீவிரமடைந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 73 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருபது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கேரள மாநிலத்தில் 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், 'கொரோன வைரஸ் வேகமாக பரவி வருவதை கருத்தில் கொண்டு மார்ச் 31 வரை டெல்லியிலுள்ள சினிமா திரையரங்குகள், பள்ளி, கல்லூரிகள் மூடப்படும்' என தெரிவித்துள்ளார். மேலும் டெல்லி அரசு கொரோனா வைரசை வேகமாக பரவும் தொற்று நோயாக அறிவித்துள்ளது. டெல்லியிலுள்ள ஆரம்ப பள்ளிகள் ஏற்கனவே மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ARVIND KEJRIWAL, DELHI, CORONA VIRUS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்