"அவங்க இறந்துட்டாங்க.." 'மார்ச்சுவரி'யில் இருந்த தாயின் 'உடல்'... சென்று பார்த்த மகனுக்கு காத்திருந்த 'அதிர்ச்சி'... அடுத்தடுத்து காத்திருந்த ஷாக்கிங் 'ட்விஸ்ட்'!!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

டெல்லி பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், சில தினங்களுக்கு முன் கரிகபதி பரிசுத்தம் (Garikapati Parisuddam) என்ற 69 வயதான கிறிஸ்துவ பெண்மணி ஒருவர் தனது வீட்டிலுள்ள பாத்ரூமில் தவறி விழுந்ததாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பரிசுத்தம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அந்த பெண்ணின் உறவினர்கள் வர வேண்டி இருந்ததால் பெண்ணின் உடலை மருத்துவமனையின் பிணவறையில் (Mortuary) வைத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, பரிசுத்தத்தின் மகன் மனோகர் மருத்துவமனை வந்துள்ள நிலையில், அவரிடம் தாயின் உடலை மருத்துவமனை நிர்வாகம் காண்பித்தது. ஆனால் மகன் மனோகருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம், அங்கு தாயின் உடலுக்கு பதிலாக வேறு பெண்மணியின் உடல் இருந்தது.

இது தொடர்பாக, மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்ட போது, தவறுதலாக பிணவறையில் இருந்த வேறொரு இந்து மதத்தைச் சேர்ந்த பெண்ணின் உடலுக்கு பதிலாக பரிசுத்தம் உடல் மாற்றி கொடுக்கப்பட்டது என்றும், அவர்கள் அந்த உடலுக்கு இறுதி சடங்கு மேற்கொண்டனர் என்றும் தெரிவித்தனர். இதுகுறித்து மனோகர் கூறுகையில், 'மொத்தமாக மார்ச்சுவரியில் மூன்று பேரின் உடல்கள் தான் இருந்தன. இதில் இரண்டு பேரின் உடல் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தவர்களாவர். எனது தாய் மட்டும் தான் கொரோனா தொற்று மூலம் உயிரிழக்கவில்லை. குறைந்த உடல்களே இருந்தும் எப்படி உடல் மாறியது?' என கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக, பரிசுத்தத்தை உடலை வாங்கிச் சென்ற குடும்பத்தினர், தவறுதலாக உடலை அடையாளம் காட்டியதால் தான் இந்த குழப்பம் நடந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. ஆனால், அந்த குடும்பத்தாரிடம் கேட்ட போது, எங்களை மருத்துவமனை நிர்வாகம் உடலை பார்க்கக் கூட அனுமதிக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையின் அலட்சியத்தால், தனது தாயின் உடலை மாற்றி எடுத்துச் சென்று இறுதி சடங்கும் செய்ததற்காக மருத்துவமனை மீது மனோகர் வழக்குப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்