'இந்திய மக்களின் இதயத்தில் குடிபுகுந்த ஆம்புலன்ஸ் டிரைவர்...' '200 கொரோனா நோயாளிகளை சுமந்து சென்றவர்...' - நெகிழ்ச்சி சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியா200 க்கும் மேற்பட்ட தடவைகள் கொரோனா நோயாளிகளின் உடல்களை எடுத்துச் சென்று சேவையாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர் இறுதியில் கொரோனா வைரசிற்கு பலியான சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.
டெல்லியில் இலவசமாக அவசரகால சேவைகளை வழங்கும் ஷஹீத் பகத் சிங் சேவா தளம் என்ற அமைப்பில் 24 மணி நேர ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்தவர் ஆரிப் கான்.
48 வயதான இவர், வீட்டில் உள்ளவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுவிடும் என்ற பயத்தினால்,கடந்த 6 மாதங்களாக வீட்டிற்கே செல்லாமல் ஆம்புலன்சிலேயே தங்கி, கொரோனா நோயாளிகளின் உடல்களை இறுதிச் சடங்கு செய்வதற்கு எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
இறுதிச் சடங்கு செய்ய பணம் இல்லாதவர்களுக்கு பண உதவியும், உற்றார் இல்லாத உடல்களுக்கு அவரே இறுதிச்சடங்கும் செய்து வந்ததாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.
மக்களின் மேல் கருணை உள்ளம் கொண்ட அவரின் மகன் ஆசிப் (27)எட்டு மாதங்களாக வேலையில்லாமல் தவிக்கிறார். தன் தந்தை இழப்பு குறித்து கூறுகையில், “நான் இப்போது வீட்டை கவனித்துக் கொள்ளும் பொறுப்புடன் இருக்கிறேன். தந்தை இறந்த பிறகு, நிறைய நல்ல மனிதர்கள் மற்றும் அமைப்புகளும் பணத்தை திரட்டி எங்கள் குடும்பத்திற்கு உதவினர். எனக் கூறினார்.
தற்போது வரை ரூ .3.12 லட்சம் ஆசிப்பின் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டிருந்தது.
அவரது அம்மாவிற்கும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சகோதரர்களால் இறுதி சடங்கில் பங்கேற்க முடியாமல் போனதாக மகன் ஆசிப் தெரிவித்துள்ளார்.
சாதரணமாக வாடகை வீட்டில் குடியிருந்து பொதுமக்களுக்காக சேவை செய்த ஆம்புலன்ஸ் டிரைவர் ஆரிப் நாட்டு மக்கள் இதயங்களில் குடிபுகுந்து விட்டார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தமிழகம்: மேலும் 5 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு! சென்னையில் மொத்த பாதிப்பு, தமிழகத்தில் பலி எண்ணிக்கை! முழு விபரம்!
- 'குளிர் காலம் வந்திருச்சு... கொரோனா பாதிப்பு அதிகரிக்குமா'?.. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்!.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
- 'இனிமே தான் சவாலான காலகட்டம்'... தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்து... அமைச்சர் விஜயபாஸ்கர் 'பரபரப்பு' தகவல்!
- 'தமிழகத்தின் இன்றைய (10-10-2020) கொரோனா அப்டேட்'... 'சென்னையில் மட்டும் ஒரே நாளில்'... 'முழு விவரங்கள் உள்ளே!'...
- 'சென்னையில் மீண்டும்'... 'வேகமாக அதிகரிக்கும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்'... 'எந்தெந்த ஏரியாக்களில் எத்தனை தெருக்களுக்கு சீல்?!!'... 'மாநகராட்சி தகவல்!'...
- '7 மாசம் ஆச்சு'... 'பிறந்த குழந்தையை பாக்க முடியலியே'... 'பரிதவித்த வங்கி மேலாளர்'... நெகிழ வைத்த சம்பவம்!
- 'தமிழகத்தின் இன்றைய (09-10-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்...? - முழு விவரங்கள்...!
- குட் நியூஸ்...! 'கொரோனா தடுப்பூசியிலே அது தான் இப்போ லீடிங்...' - இது முக்கியமா அவங்களோட உடம்புல தான் நல்ல பலன் தருது...!
- "கொரோனா காலத்தில் நர்சாக சேவை புரிந்த நடிகைக்கு என்ன ஆச்சு?".. ‘இன்ஸ்டாகிராமில்’ வெளியான ‘வைரல்’ பதிவு!
- "இப்படியே போச்சுனா"... - 'சென்னையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா?!!'... ’மாநகராட்சி ஆணையர் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை!!!'...