"குர்தா பட்டனே சரி இல்லயே.." பெண் கொண்டு வந்த Bag.. சந்தேகத்துல ஓப்பன் பண்ணிய அதிகாரிகள்.. "மொத்தமா 13 கோடி ரூபாயாம்.."
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லி விமான நிலையத்தில், லைபீரிய பெண் ஒருவர் வந்த நிலையில், அவர் மீது சந்தேகம் எழவே, பரிசோதித்து பார்த்த அதிகாரிகளுக்கு கடும் அதிர்ச்சி ஒன்று காத்து இருந்தது.
Also Read | "ஒரு மீனோட விலை 13 லட்சமா??.." வாயடைத்து போன நெட்டிசன்கள்.. அப்படி என்ன தான் இருக்கு அதுல??
கடந்த சில தினங்களுக்கு முன், அடிஸ் அபாபாவில் இருந்து லைபீரிய பெண் ஒருவர் டெல்லி விமான நிலையம் வந்துள்ளார்.
பயணிகளின் தனிப்பட்ட முறையில் சோதனை செய்த போது, அந்த லைபீரிய பெண் கொண்டு வந்த உடைமைகள் மீது அங்கிருந்த அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
குர்தா பட்டன் மீது டவுட்..
அவர் கொண்டு வந்த பையில், மொத்தம் 11 குர்தாக்கள் இருந்துள்ளது. அது மட்டுமில்லாமல், இதிலுள்ள பட்டன்கள் வழக்கமாக இல்லாமல், உத்தேசமாக வைத்து தைக்கப்பட்டிருந்தது. அதே போல, இவை வழக்கத்துக்கு மாறாகவும் இருந்துள்ளதால், குர்தாவின் ஒரு பட்டனை உடைத்து அதிகாரிகள் சோதனை செய்து பார்த்தனர்.
அப்போது, அந்த பட்டனுக்குள் போதைப் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அனைத்து குர்தாவில் உள்ள பட்டன்களையும் அதிகாரிகள் உடைத்து உள்ளே என்ன இருக்கிறது என பார்த்த போது, இன்னும் பேரதிர்ச்சி தான் காத்திருந்தது. அதாவது, மொத்தம் இருந்த 272 பட்டன்களில், 947 கிராம் போதை பொருளை மறைத்து வைத்து, அந்த பெண் விமான நிலையம் கொண்டு வந்துள்ளார்.
மொத்தமா 13.26 கோடி ரூபாயாம்..
அதே போல, இந்த போதை பொருட்களின் மதிப்பும் சுமார் 13.26 கோடி ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனையடுத்து, அந்த லைபீரிய பெண்ணைக் கைது செய்த அதிகாரிகள், அவரிடம் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக, கடந்த சில மாதங்களாகவே, இது போன்று விமான நிலையத்தின் மூலம் நாடு விட்டு நாடு போதை பொருட்களை பல நூதன முறைகளில் கடத்திக் கொண்டு வருவது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், லைபீரிய பெண் ஒருவர் குர்தா பட்டன்களில் போதைப் பொருளை மறைத்து கொண்டு வந்த விஷயமும், டெல்லி விமான நிலையத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
வெளியேறிய ரோகித் சர்மா.. இந்திய அணியின் புது கேப்டனான பும்ரா! இங்கிலாந்து தொடாரின் லேட்டஸ்ட் அப்டேட்
தொடர்புடைய செய்திகள்
- "புருஷன் சவூதி போய்ட்டாரு.. இப்போதைக்கு வரமாட்டாரு"... மனைவி போட்ட பக்கா பிளான்.. 5 வருஷம் கழிச்சு ஆசையா ஊருக்கு வந்த கணவருக்கு காத்திருந்த ஷாக்..!
- தீராத முதுகுவலி.. கிட்னி-ல கல் வந்துருச்சோன்னு பயத்துல ஹாஸ்பிட்டலுக்கு சென்ற பெண்.. டாக்டர் சொன்னதை கேட்டு அப்படியே திகைச்சு போய்ட்டாங்க..!
- புருஷன் வர 15 நாள் ஆகும்.. காதலனுடன் லாட்ஜுக்கு சென்ற மனைவி.. விஷயம் கேள்விப்பட்டு நேரா ரூமுக்குள்ள நுழைஞ்ச கணவன் செஞ்ச காரியம்..!
- கணவர் இறந்து.. 2 ஆண்டுகளுக்கு பின் பிறந்த குழந்தை.. "அவரு மேல அம்புட்டு லவ்வு'ங்க.." மனம் உருக வைத்த மனைவி..
- இல்ல புரில.. பொம்மையை கல்யாணம் செஞ்சு.. குட்டி பொம்மைக்கு அம்மா ஆகிவிட்டதாக அறிவித்த பெண்..!
- திருமணத்தில் முடிந்த 2 வருட காதல்.. அடுத்த 45 நாளுல அரங்கேறிய ட்விஸ்ட்.. மாப்பிள்ளை வீட்டில் பரபரப்பு
- இரண்டாம் உலகப்போரின் முக்கிய சீக்ரட் ஏஜெண்டை பல வருஷமா தேடிய அதிகாரிகள்.. தன்னோட பாட்டி எழுதிய டைரியை படிச்ச பேத்திக்கு ஏற்பட்ட ஷாக்..!
- "புருஷன் விட்டுட்டு போய்ட்டான்.. அந்த பெண்ணை நீ கல்யாணம் செஞ்சுக்க".. மிரட்டிய கும்பல்..விரக்தியில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு..!
- மாயமான பெண் மதபோதகர்.. ஆடுமேய்க்கச் சென்றவர் பார்த்த பயங்கர சம்பவம்.. பரபரப்பான சென்னை..!
- "நைட் தூங்கப் போறப்போ என் கண்ணை கட்டிடுவாரு".. ஆன்லைனில் அரும்பிய காதலால் வந்த சோகம்.. 10 மாசத்துக்கு அப்பறம் மனைவிக்கு தெரியவந்த உண்மை..!