"போதைப்பொருள் விவகாரம்: ஆஜரான தீபிகா படுகோனா.. 6 மணி நேரம் NCB விசாரணை!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சுஷாந்த் சிங் மரணத்தைத் தொடர்ந்து, இந்தி திரையுலகில் போதைப்பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதன் விளைவாக சுஷாந்துக்கு போதைப்பொருள் வாங்கிய குற்றச்சாட்டுகளின் கீழ் நடிகை ரியா சக்ரபோர்த்தி கடந்த 8-ந் தேதி கைது செய்யப்பட்டார். அவருடன், அவரது தம்பி சோவிக், சுஷாந்த் சிங்கின் வீட்டு மேலாளர் சாமுவேல் மிரண்டா, வேலைக்காரர் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.

மேலும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நடிகைகள் ரகுல் பிரீத் சிங், தீபிகா படுகோனே,  சாரா அலிகான், ஷரத்தா கபூர் ஆகியோருக்கும் விசாரணையில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர். இதில் முதலில் ஆஜரான நடிகை ரகுல் பிரீத் சிங்கிடம் 4 மணி நேரம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவரது வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.

இதனை தொடர்ந்து,  படப்பிடிப்புக்காக கோவா சென்றிருந்த நடிகை தீபிகா படுகோனே இன்று விசாரணைக்காக,  தனி விமானத்தில் வந்து, மும்பையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாரா அலிகான், ஷரத்தா கபூர் ஆகியோரும் இன்று விசாரணைக்கு ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே வழக்கில் ஜெயா சாஹா என்ற பாலிவுட் நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவன நிா்வாகியிடம் முன்னதாக விசாரணை நத்திய என்சிபி (போதைப்பொருள் தடுப்பு பிரிவு ) , தற்போது தீபிகாவிடமும்,  தீபிகா படுகோனேவின் மேலாளா் கரிஷ்மா பிரகாஷிடமும் விசாரணை நடத்தியுள்ளது. இதில் நடிகை தீபிகா படுகோனேவிடம் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விசாரணையில் தீபிகா என்ன சொன்னார்? உள்ளிட்ட விவரங்கள் என்சிபியின் தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்