'ஏப்ரல் 14-ம் தேதிக்குப் பிறகு’... ‘ஊரடங்கு உத்தரவு தொடருமா?’... ‘மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கம்’!
முகப்பு > செய்திகள் > இந்தியாஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 14-ம் தேதிக்குப் பின்னர் நீட்டிப்பதா இல்லை விலக்கிக் கொள்வதா என்பது குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என மத்திய அமைச்ச பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு 12 நாட்கள் கடந்துள்ளன. இந்த நேரத்தில், ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது ஏப்ரல் 14-ம் தேதியுடன் முடிவுக்கு வந்து விடுமா என்ற கேள்வி எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் காணொலிக் காட்சி மூலம் இன்று நடந்தது. கொரோனா தொற்று பரவாமல் தடுப்பது இதற்காக அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும் மாநில அரசுகளுடன் இணைந்து கொரோனா ஒழிப்பு பணியை மேற்கொள்வது பற்றியும் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசித்தார். பின்னர் இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது: ‘கொரோனா பரவலை தடுப்பதற்காக 21 நாட்கள் ஊடங்கு உத்தரவு அமலில் உள்ளது. நிலைமையை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. உலகம் முழுவதும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
தற்போது ஊரடங்கு உத்தரவு குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. சரியான நேரத்தில் இதுதொடர்பாக முடிவெடுக்கப்படும். அதன் பிறகே இதுபற்றி ஏதும் கூற முடியும். எந்த முடிவு எடுக்கப்பட்டாலும் அது மக்களின் நலன் கருதியே இருக்கும். நாட்டின் நலனை கருத்தில் கொண்டே அரசு முடிவெடுக்கும்’ என்று அவர் கூறினார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கொரோனா வைரஸ் பாதிப்பில்‘... ‘ஆண்கள், பெண்கள் எவ்வளவு பேர்’... 'மத்திய சுகாதாரத் துறை விளக்கம்’
- 'இப்போ வெளிய வாங்க பாக்கலாம்' ... 'இனிமே வெளிய சுத்துனா ஆப்பு தான்' ... அரியலூர் கலெக்டரின் அசத்தல் ஐடியா!
- ‘சிலருக்கு எந்த அறிகுறியும் இல்லாம பாசிடீவ் ரிசல்ட்’.. ‘மக்கள் ரொம்ப கவனமா இருக்கணும்’.. முதல்வர் அறிவுறுத்தல்..!
- ‘10 மாத குழந்தை, பணிப்பெண் உட்பட கோவையில் குணமான 5 பேர்!’.. ‘மெல்லத் துளிர்விட்ட நம்பிக்கை!’
- இந்தியா முழுவதும் 'உயிரியல் பூங்கா'க்களை கண்காணிக்க... மத்திய அரசு அதிரடி உத்தரவு!... ஏன் தெரியுமா?... அதிர்ச்சியூட்டும் பின்னணி!
- 'தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா!'.. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6ஆக உயர்வு!'
- ஒரே மருத்துவமனையில் '26 நர்சுகள்', 3 டாக்டர்களுக்கு 'கொரோனா'... 'சீல்' வைக்கப்பட்ட வளாகம்.. 'அதிர்ச்சியை' ஏற்படுத்திய சம்பவம்...
- 'இந்த கோட்ட தாண்டி ஊருக்குள்ள வரக்கூடாது' ... 'ஊர் எல்லையில் சோதனைச்சாவடி' ... ஊரடங்கு ஃபாலோ பண்றதுல பசங்க Perfect!
- ‘வெளியே பட்டாசு வெடிச்சாங்க’.. ‘தீபாவளினு நெனைச்சு துப்பாக்கியால் சுட்டுட்டேன்’.. பரபரப்பை ஏற்படுத்திய பாஜக மகளிரணி தலைவி..!
- 'குழந்தை, குட்டிகளோடு ஷாப்பிங் போற நேரமா'...'கொஞ்சம் கூட பயம் இல்ல'...இனி வேற பிளான் தான்!