கேரளா 'couple share' குழுவில் இருந்த 100 மனைவிகள் ஏற்கனவே.. விசாரணையில் வெளிவந்துள்ள புதிய தகவல்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளா: கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரை அவரது சொந்த கணவரே நண்பர்களுடன் உறவு கொள்ள வற்புறுத்தியதாக காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.
கோட்டயம் போலீஸ் அதிகாரி இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்து பெண்ணின் கணவரை உடனடியாக கைது செய்தார். அவரிடம் விசாரணை நடத்தியபோது, கேரளாவில் மனைவிகளை பரிமாறிக் கொள்ளும் குழுக்கள் ரகசியமாக செயல்பட்டது தெரிய வந்தது. அந்த குழுக்களில் ஆயிரக்கணக்கானோர் உறுப்பினர்களாக இருப்பதும் தெரிய வந்தது.
ரகசிய உடன்படிக்கைகள்:
இந்த குழுவில் இணைந்தவர்கள், குழுவில் இருந்து வெளியேறாமல் இருக்க பல்வேறு ரகசிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக குழுவில் முதன்முறை உறுப்பினராக சேருவோர், மனைவியுடன் விருந்துக்கு வரவழைக்கப்படுவது வாடிக்கை.
அங்கு அவருக்கு மற்ற குழு உறுப்பினர்களின் மனைவிமார்கள் அறிமுகம் செய்து வைக்கப்படுவார். அவர்களுடன் பழகுவதற்கு குறிப்பிட்ட நேரம் வழங்கப்படும். இதில் புதிய உறுப்பினருடன், நெருங்கி பழகும் பெண்ணுடன், புதிய உறுப்பினர் உறவு வைத்துக்கொள்ள ஏற்பாடு செய்வார்களாம்.
புதிய உறுப்பினரின் மனைவிக்கும் வாய்ப்பு:
இதேபோல் புதிய உறுப்பினரின் மனைவிக்கும் அந்த குழுவில் இருக்கும் ஆண் நண்பர் அறிமுகப்படுத்தப்படுவார். சிறிது நேர பழக்கத்திற்கு பிறகு அந்த நபரோடு உறவு வைத்துக்கொள்ள புதிய உறுப்பினரின் மனைவிக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.
இது அவர்களுக்கு தெரியாமலேயே வீடியோ எடுக்கப்படும். இந்த நிகழ்விற்கு பிறகு உறுப்பினர் யாராவது இதுபற்றி வெளியே கூறுவதாக தெரிவித்தால், அவர்களை குழுவினர் இந்த ஆபாச படங்களை காட்டி மிரட்டுவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இரண்டு வருடங்கள் முன்பே புகார்:
எனவே பாதிக்கப்பட்ட பெண்கள் எதுக்குடா வம்பு என இருந்துள்ளார்கள். தற்போது புகார் கூறிய பெண்ணும், 2 ஆண்டுகளுக்கு முன்பே இச்சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார். அதனை போலீசார் முறையாக விசாரிக்காமல் அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மனம் உடைந்த பெண், கணவரின் கொடுமைக்கு சகித்துக் கொண்டிருந்துள்ளார்.
இப்போது இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்து இந்தியா முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், குழுவில் இருந்த பலர், குழுவை விட்டு வெளியேறுவது அதிகரித்து வருகிறது. இக்குழுக்கள் சைபர் கிரைம் கண்காணிப்பில் இருப்பதால் குழுவில் இருந்து வெளியேறுகிறவர்கள் லிஸ்டை சைபர் கிரைம் நிபுணர்கள் கண்காணித்து வருகின்றனர்.
நூறு மனைவிகள் எடுத்துள்ள முடிவு:
அந்த குழுக்களில் இருந்து வெளியேறுவோரில் பெண்களே அதிகம் என்று கூறப்படுகிறது. இந்த பெண்களில் 100-க்கும் மேற்பட்டோர் ஏற்கனவே கணவரை பிரிந்து இருப்பதும் தற்போது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீசார் தெரிவிக்கயில், இக்குழுக்களில் சேரும் பெண்கள் முதலில் ஆர்வமாக வந்தாலும், ஒவ்வொருவராக அழைக்கும் போது மனம் வெறுத்து விட்டது.
கேரளாவில் இதுபோன்ற குழுக்கள் மூலம் சமூகத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வற்புறுத்தியுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி 'ஒருநாள்'.. கேரளாவில் மனைவிகளை 'எக்ஸ்சேன்ஞ்' செய்வது குறித்து வெளியாகியுள்ள பரபரப்பு தகவல்!
- ஏன் மனைவியை பகிர்ந்துக் கொள்கிறார்கள்..? கேரளாவை உலுக்கிய வழக்கு குறித்த உளவியல் பின்னணி
- Couple Sharing குழு வழக்கு.. '14 ஆயிரம்' ரூபா குடுத்து.. இந்த தப்ப வேற பண்ணிருக்காங்க.. தோண்டி பார்த்ததில் கிடைத்த 'ஷாக்' ரிப்போர்ட்
- காதலன் திருமணத்த நிறுத்தணும்.. ஹாஸ்பிடல்'ல குழந்தையை திருடி.. பெண் போட்ட திட்டம்.. தலையே சுத்துதுப்பா சாமி
- பரபரப்பு! Couple Sharing குரூப்... மனைவிகளை விற்று சம்பாதிச்ச 7 ஆண்கள்! சிக்குனது எப்படி?
- எதுக்குப்பா கல்யாணத்து அன்னைக்கே டைவர்ஸ் கேக்குற? மாப்பிள்ளை சொன்னத கேட்டு ஆடிப்போன கோர்ட்டு!
- சபரிமலைக்குச் சென்ற முதல் பெண் மீது கொடூரத் தாக்குதல்! என்ன நடந்தது?
- கல்யாணமாகி 11 வருசமா ஏம்மா புருஷன் வீட்டுக்கு போகல..? மனைவி சொன்ன ‘ஒரு’ காரணம்.. உடனே ‘விவாகரத்து’ கொடுத்த நீதிமன்றம்..!
- அதிவேகமாக ஒரே பைக்கில் சென்ற 3 சிறுவர்கள்... மரத்தில் மோதி பலியான துயரம்..!
- குட்டி உடன் போலீஸ் ஸ்டேஷன் வந்த யானை... உள்ளே அனுமதிக்க நீண்ட நேர போராட்டம்!- வைரல் காட்சிகள்