ஒரே ஆண் நண்பரை காதலித்த இரண்டு பெண்கள்.. காதலன் எடுத்த விபரீத முடிவு

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கர்நாடகா: ஒரே இளைஞரை இரண்டு பெண்கள் காதலித்ததால் காதலன் எதிர்பாராதவிதமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

ஒரே ஆண் நண்பரை காதலித்த இரண்டு பெண்கள்.. காதலன் எடுத்த விபரீத முடிவு
Advertising
>
Advertising

கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே ராணிபுரா  பகுதியை சேர்ந்தவர் லியோட் டிஜோசா வயது (29). இவர் அதே பகுதியை சேர்ந்த அஸ்விதா (22) என்ற பெண்ணை கடந்த 8 வருடமாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில்  2 மாதங்களுக்கு முன்பு இவர்களது காதலுக்கு வில்லியாக குறுக்கோ வந்த மற்றொரு பெண் டாக்லின்.  லியோட் டிஜோசா - அஸ்விதா காதலிப்பது தெரிந்தும் ஒருதலை பட்சமாக காதலித்து வந்துள்ளார்.

இந்த விவகாரம் லியோட் டிஜோசா - அஸ்விதாவுக்கும் பெரும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. இடையில் வந்த பெண்ணால் 8 வருட காதலை இழந்து விடுவோமோ என்ற பயம் அஸ்விதாவுக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்,  நேற்று மாலை சோமேஸ்வரா  கடற்கரைப்பகுதியில் லியோட் டிசோசா அவரது காதலி அஸ்விதா மற்றும் ஜாக்லின் ஆகிய மூவரும் பேசிக் கொண்டிருந்தனர். காதல் விவகாரத்தில் மாட்டிக்கொண்ட லியோட் டிசோசா யார் பக்கம் பேசுவது என்று புரியாமல் திக்கி தவித்துள்ளார்.

death of young man because two women fell in love

இதனிடையே, காதலின் வலியை ஏற்க முடியாத அஸ்விதா திடீரென அரபிக் கடலில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனை பார்த்ததும் பதறி போன காதலன் லியோட் டிசோசா கடலில் குதித்து அஸ்விதாவை உயிருடன் மீட்டார். கடலில் இருந்து கரை வந்தபோது இருவரும் மயக்க நிலையில் இருந்தனர். பின்னர், டாக்லின் இருவரையும் அங்கிருந்த நபர்களின் உதவியோடு, தேரளகட்டே தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் வழியிலேயே லீயோட்டிஜோசா உயிரிழந்தார் .

அஸ்விதா தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக உல்லால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக மங்களூர் மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,  சோமேஸ்வரா கடற்கரை பகுதியில் நேற்று மாலை காதலர்களான அஸ்விதா லியோட்டி ஜோசா மற்றும் டாக்லின் ஆகியமூவரும்  பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களுக்குள் யார் காதலிப்பது என்பதில் வாக்குவாதம் முற்றியதில் அஸ்விதா கடலுக்குள் குதித்து விட்டார். அவரை காப்பாற்ற முயன்று மருத்துவமனை செல்லும் வழியில் காதலன் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் காதல் பிரச்னை என்று தெரியவந்துள்ளது என தெரிவித்தார்.

KARNATAKA, MANGALORE, YOUNG MAN, TWO WOMENS, FALL IN LOVE, POLICE, LOVERS PROBLEM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்