‘ஒரு ஆட்டுக்குட்டியின் மரணத்தால்’.. ‘2.7 கோடி ரூபாயை இழந்த நிறுவனம்’..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

லாரி மோதி உயிரிழந்த ஆட்டால் 2.68 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக எம்.சி.எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒடிஷா மாநிலம் புவனேஷ்வருக்கு அருகே கோல் இந்தியாவின் மகாநதி நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் வழக்கம்போல இங்கிருந்து லாரிகளில் நிலக்கரியை நிரப்பி கொண்டு செல்லும் பணி நடந்துகொண்டிருந்துள்ளது. அப்போது பக்கத்துக் கிராமத்திலுள்ள ஆடு ஒன்று நிலக்கரி ஏற்றிச் சென்ற லாரி ஒன்றின் குறுக்கே விழுந்து உயிரிழந்துள்ளது.

இதையடுத்து கிராம மக்கள் சுரங்கம் முன் ஒன்று திரண்டு உயிரிழந்த ஆட்டுக்கு நஷ்ட ஈடாக 60,000 ரூபாய் வழங்க வேண்டுமென போராட்டம் நடத்தியுள்ளனர். மேலும் அவர்கள் நிலக்கரிகளை ஏற்றிச் செல்லும் ரயில் தண்டவாளங்களை மறைத்தும் போராட்டம் நடத்தியுள்ளனர். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களைக் கலைந்து போகச் செய்துள்ளனர்.

இதுகுறித்து பேசியுள்ள எம்.சி.எல் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர், “நஷ்ட ஈடு கேட்டு கிராம மக்கள் சுரங்கத்தின் 1 மற்றும் 2ஆம் கதவுகளை அடைத்து போராட்டம் நடத்தினர். காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 2.30 மணி வரை நீடித்த இந்தப் போராட்டத்தால் எங்கள் சுரங்கத்துக்கு சுமார் 2.68 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக போராட்டக்காரர்கள் மீது நாங்கள் வழக்குப்பதிவு செய்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் அனுமதி இல்லாத தடை செய்யப்பட்ட பகுதியில் எப்படி மக்கள் நுழையலாம் என்பதே சுரங்க நிறுவனத்தின் வாதமாக உள்ளது.

ODISHA, GOAT, LORRY, ACCIDENT, LOSS, CRORE, MCL, PROTEST, VILLAGE, PEOPLE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்