'சொன்னா கேக்கமாட்டீங்க'... 'நடு ரோட்டில் வைத்து மாணவருக்கு நேர்ந்த சம்பவம்'... வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ மாணவர் ஒருவரை, காவல்துறை அதிகாரி கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள நெக்ஸ்ட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதே கோரிக்கையை வலியுறுத்தி  விஜயவாடாவை சேர்ந்த பயிற்சி மருத்துவர்களும் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த பகுதிக்கு வந்த காவல்துறையினர் போக்குவரத்துக்கு இடையூறாக போராட்டம் நடத்த கூடாது, எனவே கலைந்து செல்லுமாறு மருத்துவர்களை போலீசார் கேட்டு கொண்டனர். ஆனால் அதனை ஏற்க மறுத்த மருத்துவ மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள். இதையடுத்து அந்த பகுதிக்கு வந்த காவல்துறை துணை ஆணையர் ஹர்ஷவர்தான் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்களை கலைந்து செல்லுமாறு எச்சரிக்கை விடுத்தார். ஆனால் மாணவர்கள் துணை ஆணையருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்..

இதில் ஆவேசம் அடைந்த ஹர்ஷவர்த்தன் மருத்துவ மாணவர் ஒருவரை சட்டை காலரை பிடித்து இழுத்து கன்னத்தில் அறைந்தார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. இதனைத்தொடர்ந்து அந்த பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட  25 பேரை, காவல்துறையினர் கைது செய்து அழைத்து சென்றார்கள். மருத்துவ மாணவரை காவல்துறை அதிகாரி கன்னத்தில் அறையும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

DOCTORSPROTEST, POLICE, ANDHRA PRADESH, VIJAYAWADA DEPUTY COMMISSIONER OF POLICE, V HARSHAVARDHAN RAJU, DR M KALYAN, NTR UNIVERSITY OF HEALTH SCIENCES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்