'அவங்க நேர்ல வந்தா தான் துட்டு...' 'வேலையும் இல்ல, பணமும் இல்ல...' அப்படின்னா வேற வழியே இல்ல...'100 வயது தாயை கட்டிலில் இழுத்துக்கொண்டு வங்கிக்கு சென்ற மகள்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஒடிசாவில் ரூ.1500-ஐ வங்கிக்கணக்கில் இருந்து எடுக்க தன் 100 வயதுள்ள அம்மாவை 60 வயது மூதாட்டி கட்டிலில் படுக்க வைத்த படியே கூட்டி சென்ற சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் அனைத்து தரப்பு தொழில் முனைவோரும் பெரும் சங்கடங்களை அனுபவித்து வருகின்றனர். ஏழை மக்களுக்கு பயன்பெறும் வகையில் வேலை இல்லாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், ஜன்தன் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஏப்ரல் முதல் ஜுன் மாதம் வரை ரூ.500 நிதியுதவி வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் ஒடிசா மாநிலம் நாபராவில் தனது 100 வயது தாயின் வங்கிக்கணக்கில் உள்ள 1500  ரூபாயை எடுக்க வங்கிக்கு சென்றுள்ளார் அவரது 60 வயது மகள் புஞ்சிமதி டெய். ஆனால் வங்கியில் கணக்கு யாருடைய பேரில் உள்ளதோ அவர்கள் தான் நேரில் வந்து பணம் எடுக்க முடியும் மற்றவர்களுக்கு கொடுக்கப்பட மாட்டாது எனவும் தெரிவித்துள்ளனர்.

புஞ்சிமதி டெய், தனது தாய்க்கு வயதாகி விட்டதால் அவரால் வங்கிக்கு வரமுடியாது எனவும் உடல்நிலை சரி எனவும் தெரிவித்ததாகவும் ஆனால் என்ன கூறினாலும்   மேலாளர் ஒத்துக் கொள்ளவில்லை என உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே வேலையும் இல்லாமல், பணம் இல்லாமல் தவித்து வந்த 60 வயதான புஞ்சிமதி டெய், வேறு வழி இல்லாமல் தனது அம்மாவை கட்டிலில் படுக்க வைத்து வங்கிக்கு கால்நடையாக இழுத்து சென்றுள்ளார். மூதாட்டியை பார்த்த பிறகு தான் 1500 ரூபாயை அவர்களிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் புஞ்சிமதி டெய் மற்றும் அவரது அம்மாவை இழுத்து சென்ற புகைப்படங்களும் வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் பரவி வைரலாகியது.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள நாபுரா மாவட்ட மாவட்ட ஆட்சியர், வங்கியின் கிளை மேலாளர் வீட்டிற்கு வருவதாக சொல்லியும், அந்தப் பெண் உடல்நலம் சரியில்லாத தனது அம்மாவை வங்கிக்கு அழைத்து வந்துள்ளார். தற்போது கொரோனா ஊரடங்கு நேரத்தில் குறைவான ஆட்களே வேலையில் உள்ளதால் உடனடியாக அவரால் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு செல்ல முடியவில்லை. அதற்குள் அவர் தனது அம்மாவை கட்டிலில் படுக்க வைத்து இழுத்து வந்துள்ளார்' என கூறினார்.

இவ்வாறு இணைய சேவை இல்லாமல் அவதியும் மக்களை மேலும் சிரமத்திற்கு அளக்காமல், வங்கிக் கணக்கில் உள்ள பணம் எளிதில் கிடைக்கும் வகையில் போதிய வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்