‘பொம்பள பிள்ளைங்க வீட்டைவிட்டு வெளியே போகக்கூடாது’!.. ஊரே எதிர்த்து நின்னப்போ, ‘அம்மா’ சொன்ன ஒரு வார்த்தை.. சாதித்துக் காட்டிய இளம்பெண்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பெண் குழந்தை வீட்டைவிட்டு வெளியே போகக்கூடாது என கிராமத்தினர் எதிர்த்த நிலையில், 19 வயது இளம்பெண் நடைபந்தையத்தில் தேசிய அளவில் சாதனை படைத்து அசத்தியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மாவட்டத்தை சேர்ந்தவர் பிராஜூ. இவருக்கு மனைவி, 3 பெண் பிள்ளைகள், 1 ஆண் பிள்ளை உள்ளனர். இவர் கடந்த 2010ம் ஆண்டு மும்பையில் கட்டுமான வேலை செய்யும்போது ஏற்பட்ட மின்சார விபத்தில் படுகாயமடைந்துள்ளார். அதில் அவரது கால் வீரர்கள் பறிபோயின. இதனால் அடுத்த 3 ஆண்டுகளுக்கு எந்த வேலைக்கும் செல்லக்கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

தந்தை படுத்த படிக்கையானதால் குடும்பம் மிகவும் கஷ்டத்தில் இருந்துள்ளது. அப்போது அவரது 19 வயது மகள் முனிட்டா குடும்ப வறுமையை போக்க நடைப்பந்தயத்தில் கலந்துகொள்ள முடிவெடுத்துள்ளார். இதற்காக அப்பகுதி இளைஞர்களு பயிற்சி அளித்து வந்த ராணுவ வீரர் ஒருவரிடம் முனிட்டா பயிற்சிக்கு சென்றுள்ளார்.

அவரை சந்திக்கும் வரை நடைப்பந்தயம் தேசிய விளையாட்டுகளுள் ஒன்று என முனிட்டாவுக்கு தெரியவில்லை. பின்னர் அந்த ராணுவ வீரர் முனிட்டாவுக்கு எடுத்துக்கூறி முறையான பயிற்சி அளித்துள்ளார். இந்த நிலையில் குவஹாத்தியில் நடந்த நடைப்பந்தையத்தில் 10,000 மீட்டரை 47:53:58 நிமிடங்களில் கடந்து தேசிய அளவில் முனிட்டா சாதனை படைத்து அசத்தியுள்ளார்.

இதுகுறித்து தெரிவித்த முனிட்டா, ‘குடும்ப வறுமையை போக்க வேண்டுமென்றால் வெளியே சென்றாக வேண்டும். அதற்காக நடைப்பந்தயம் போன்ற விளையாட்டுகளில் கலந்துகொள் என எனது சகோதரி என்னிடம் கூறினார். அப்போது, பெண் பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என ஊரார் எங்கள் குடும்பத்தை எச்சரித்தனர். அதற்கு என் அம்மா, ஒருநாள் என் பிள்ளை சாதிப்பாள், அதனால் அவளை நான் கண்டிப்பாக அனுப்பி வைப்பேன் என அவர்களிடம் சொன்னார்.

என்னுடன் போபலுக்கு வரவேண்டுமென என் அம்மா அடிக்கடி சொல்வார். அவர்கள் விமான நிலையத்திற்கு கூட சென்றதில்லை. அதனால் சீக்கிரம் ஒரு நல்ல வேலைக்கு சென்று என் பெற்றோரை விமானத்தில் அழைத்துச் செல்ல வேண்டும். இதுதான் என் ஆசை’ என முனிட்டா தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்