'பெற்ற தாயை கொலை செய்த மகள்!'... 'உயிருக்கு போராடும் தம்பி'... 'இளம்பெண்ணின் கொலை வெறிக்கு காரணம் என்ன?'... 'பதபதைக்க வைக்கும் உண்மை சம்பவம்'...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பெற்ற தாயை இளம்பெண் குத்திக் கொலை செய்து தப்பியோடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

பெங்களூர் அருகே ராமமூர்த்தி நகர் எனும் இடத்தில், 54 வயதான நிர்மலா என்ற பெண், தனது மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்துள்ளார். 33 வயதான அவரது மகள் அம்ருதா, மென் பொறியாளாராக ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், தனக்கு ஹைதராபாத்தில் வேறொரு வேலை கிடைத்திருப்பதாகவும், பிப்ரவரி 2ம் தேதி குடும்பத்துடன் ஹைதராபாத்திற்குச் சென்று குடியேறலாம் என்றும் கூறியுள்ளார்.

பிப்ரவரி 1ம் தேதி, இரவு உணவுக்குப் பின் மூவரும் உறங்கச் சென்றுள்ளனர். அதன் பிறகு, அதிகாலை 4 மணி அளவில், அம்ரூதாவின் தம்பி ஹரீஷுக்கு ஏதோ ஒரு சத்தம் கேட்கவே, கண் விழித்துப் பார்த்துள்ளார். அப்போது, தன்னுடைய அறையில் அம்ருதா எதையோ தேடுவதைக் கண்டு, ஹரீஷ் கேள்வி கேட்டுள்ளார். அந்த சமயம், தன்னுடைய பையைத் தேடிக் கொண்டிருப்பதாக அம்ருதா தெரிவித்துள்ளார்.

பத்து நிமிடம் கழித்து மீண்டும் ஹரீஷ் அறைக்கு வந்த அம்ருதா, ஹரீஷின் கழுத்தில் பலமாக கத்தியால் குத்தியுள்ளார். வலியில் துடித்த ஹரீஷ், தனது அம்மாவைப் பற்றி அம்ருதாவிடம் கேட்டுள்ளார்.

அப்போது, தன்னுடைய தாயை, தானே கொலை செய்துவிட்டதாக அம்ருதா கூறியுள்ளார். மேலும், தான் 15 லட்சம் ரூபாய் கடன் வைத்துள்ளதாகவும், அதைத் தம்மால் திரும்ப செலுத்தமுடியவில்லை என்றும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். கடன் கொடுத்தவர்கள் பணத்தைத் திரும்பக் கேட்டு மிரட்டுவதாகவும், வீட்டுக்கு வந்து தகராறு செய்யவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனால், சமூகத்தில் குடும்பத்துக்கு கெட்ட பெயர் உருவாகும் என்று அஞ்சியுள்ளார்.

உயிருக்குப் போராடும் நிலையில், ஹரீஷ் அம்ருதாவைப் பிடிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், அம்ருதா தப்பி ஓடிவிட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஹரீஷ் சிகிச்சை பெற்று வரும் இந்த சமயத்தில், அம்ருதாவை போலீஸார் தேடி வருகின்றனர்.

CRIME, TECHIE, WOMAN, DEBT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்