தாய்க்கு ‘கல்யாணம்’ செய்து வைத்த மகள்.. டுவிட்டரில் போட்டோவை போட்டு உருக்கமான பதிவு.. குவியும் வாழ்த்து..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தாய்க்கு மகள் திருமணம் செய்து வைத்த சம்பவம் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

Advertising
>
Advertising

இன்றைய நவீன உலகத்தில் கூட திருமணமான ஒரு பெண் மறுமணம் செய்துகொள்வது என்பது அவ்வளவு எளிது இல்லை என்ற சூழ்நிலை நிலவி வருகிறது. கணவனை இழந்த அல்லது பிரிந்த பல பெண்கள் தங்கள் குழந்தைகளுக்காகவும் சமூகம் என்ன சொல்லுமோ என்ற பயத்திலும் மறுமணம் செய்து கொள்ள தயங்கி வருகின்றனர். இந்த கண்ணோட்டம் தற்போது மக்களிடையே மெல்ல மெல்ல மாறி வருகிறது. சமீபத்தில் கூட ஒரு மகள் தனது தாய்க்காக வரன் தேடி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அது நெட்டிசன்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இளம்பெண் ஒருவர் தனது தாய்க்கு திருமணம் செய்து வைத்த நிகழ்வுகளை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், தனது தாய் மணமகளாக இருப்பதையும், அந்த மங்களகரமான நாளுக்காக தனது தாய்க்கு மெஹந்தி நிகழ்ச்சி நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ‘15 ஆண்டுகளுக்கு முன்பு தனது தாய்க்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருமணத்தை வேண்டாம் என சொல்லி நிறுத்தி விட்டேன். அப்போது நானும் எனது 16 வயது சகோதரனும் எங்கள் குடும்பத்தில் ஒரு ஆண் துணை வேண்டும் என்று நினைக்கவில்லை. ஆனால் இப்பொழுது எங்கள் வாழ்க்கையில் தந்தையாக ஒருவரை வரவேற்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவரது பதிவு இணையத்தில் வைரலான நிலையில், தனது தாயின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோவை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த டுவீட்டுகளை எதிர்காலத்தில் பார்க்கும்போது தான் சந்தோசம் அடைவேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தாய்க்கு மகள் திருமணம் செய்து வைத்த சம்பவம் நெட்டிசன்கள் மத்தியில் வரவேற்பை பெற்று, அவரது தாய்க்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.இன்றைய நவீன உலகத்தில் கூட திருமணமான ஒரு பெண் மறுமணம் செய்துகொள்வது என்பது அவ்வளவு எளிது இல்லை என்ற சூழ்நிலை நிலவி வருகிறது. கணவனை இழந்த அல்லது பிரிந்த பல பெண்கள் தங்கள் குழந்தைகளுக்காகவும் சமூகம் என்ன சொல்லுமோ என்ற பயத்திலும் மறுமணம் செய்து கொள்ள தயங்கி வருகின்றனர். இந்த கண்ணோட்டம் தற்போது மக்களிடையே மெல்ல மெல்ல மாறி வருகிறது. சமீபத்தில் கூட ஒரு மகள் தனது தாய்க்காக வரன் தேடி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அது நெட்டிசன்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இளம்பெண் ஒருவர் தனது தாய்க்கு திருமணம் செய்து வைத்த நிகழ்வுகளை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், தனது தாய் மணமகளாக இருப்பதையும், அந்த மங்களகரமான நாளுக்காக தனது தாய்க்கு மெஹந்தி நிகழ்ச்சி நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ‘15 ஆண்டுகளுக்கு முன்பு தனது தாய்க்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருமணத்தை வேண்டாம் என சொல்லி நிறுத்தி விட்டேன். அப்போது நானும் எனது 16 வயது சகோதரனும் எங்கள் குடும்பத்தில் ஒரு ஆண் துணை வேண்டும் என்று நினைக்கவில்லை. ஆனால் இப்பொழுது எங்கள் வாழ்க்கையில் தந்தையாக ஒருவரை வரவேற்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவரது பதிவு இணையத்தில் வைரலான நிலையில், தனது தாயின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோவை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த டுவீட்டுகளை எதிர்காலத்தில் பார்க்கும்போது தான் சந்தோசம் அடைவேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தாய்க்கு மகள் திருமணம் செய்து வைத்த சம்பவம் நெட்டிசன்கள் மத்தியில் வரவேற்பை பெற்று, அவரது தாய்க்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

MARRIAGE, MOTHER, MOTHER MARRIAGE, மறுமணம், திருமணம், இளம்பெண்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்