'நீட் எக்ஸாம்' தேதி அறிவிச்சிட்டாங்க...! எந்த 'வெப்சைட்ல' போய் 'அப்ளை' பண்ணனும்...? - முழு விவரங்கள் உள்ளே...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவில் 2021-ஆம் ஆண்டு நீட் நுழைவுத் தேர்வுகான தேதியை மத்தியக் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

எப்போதும் மே முதல் வாரத்தில் நடைபெறும் இந்த நுழைவுத் தேர்வு கொரோனா அச்சம் காரணமாக பலமுறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக 155 நகரங்களில் நடத்தப்படும் நீட்தேர்வு, இந்தமுறை 198 நகரங்களில் நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருக்கிறார்.

தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் நடத்தப்படும் இந்த நீட் நுழைவுத் தேர்வு வரும் செப்டம்பர் 12-ம் தேதி நாடு முழுவதும் நடைபெறும் எனவும், நீட் தேர்வுக்கான விண்ணப்பங்களை நாளை மாலை 5 மணிமுதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், '2021ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 12-ம் தேதி கோவிட்-19 விதிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்படும்.

இதற்கான விண்ணப்பப் பதிவு நாளை (13-07-2021) மாலை முதல் https://ntaneet.nic.in/ என்ற இணையதளத்தில் தொடங்கும்' என பதிவிட்டுள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்