மைசூர் தசராவில் புகழ்பெற்ற யானை 'துரோணா'.. உயிருக்குப் போராடிய காட்சிகள்.. கதிகலங்க வைக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மைசூரில் உலகப் புகழ்பெற்ற தசரா பண்டிகை ஊர்வலத்தில், தங்க பல்லக்கு தூக்கி நடக்கும் துரோணா என்ற யானை உயிருக்குப் போராடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.

ஜூனியர் துரோணா என அழைக்கப்படும் இந்த யானை கர்நாடக மாநிலம் ஹன்சூர் மாவட்டத்தில் மட்டிகோடு யானைகள் முகாமில் கலந்துகொண்டிருந்தது. சனிக்கிழமை காலை தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தபோது திடீரென கீழே சரிந்து விழுந்து இறந்திருக்கிறது. 39 வயதான இந்த துரோணா மாரடைப்பு ஏற்பட்டதால் இறந்துவிட்டதாக கருதப்பட்டது. பின்னர் துரோணாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை முதல் துரோணா யானைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பாகன்களும் மருத்துவர்களும் அதற்குத் தேவையான சிகிச்சையை முறையாக அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்நிலையில்,  தண்ணீர் குடிக்கச் சென்ற துரோணாவை அருகில் உள்ள மரத்தில் சங்கிலியால் பாகன்கள் கட்டிப் போட்டுள்ளனர். அப்போது, துரோணாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மரணத்துடன்  அது போராடியது.

அப்போதும், அருகிலிருந்த பாகன்களும், காவடிகளும் துரோணாவை சங்கிலியில் இருந்து விடுவிக்கவில்லை. நெஞ்சுவலியால் துடித்துக்கொண்டிருந்த யானை துரோணா, பின்னர் தும்பிக்கையால் சங்கிலியில் இருந்து தன்னை விடுவிக்க முயன்றது. அதனால், சங்கிலியை அறுக்க முடியாத நிலையில், இடது பக்கமாக சரிந்து அதே இடத்தில்  உயிரை விட்டது. கடைசிக்கட்டத்தில் துரோணா உயிருக்குப் போராடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் கடந்த இரண்டு நாட்களாக பரவிவருகிறது.

கடந்த 2018ஆம் ஆண்டு முதல் முறையாக ஜூனியர் துரோணா என்ற இந்த யானை மைசூரு தசராவின்போது விஜயதசமியை முன்னிட்டு நடக்கும் ஜம்போ சவாரி எனப்படும் யானை ஊர்வலத்தில் தங்கப் ஹதா பல்லக்கை சுமத்து சென்றது.
ஜூனியர் துரோணாவுக்கு முன் சீனியர் துரோணா 18 ஆண்டுகளாக இந்த அணிவகுப்பில் பங்கு பெற்றிருக்கிறது. 1998-ம் சீனியர் துரோணா மின்சாரம் தாக்கி உயிரிழிந்தது.  உயிருக்கு யானை நடத்திய போராட்டம் பார்ப்பவர்களை கதிகலங்க வைத்துள்ளது.

DRONA, DASARA, ELEPHANT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்