போலீசாரின் 'கொரோனா' டான்ஸ்...! 'பொதுமக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கும் வகையில்...' வைரலாகும் கேரளா போலீஸ் படையின் நடனம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளாவை சேர்ந்த ஆறு போலீஸ்காரர்கள் முகமூடிகளை அணிந்துகொண்டு கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்ள செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நடனம் ஆடி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது,

கேரளாவில் கோவிட் -19 இருக்கிறதா என 24 பேர் பரிசோதனை செய்துள்ளனர். மூன்று பேர் தவிர மற்றவர்கள் முழுமையாக குணமடைந்தனர். செவ்வாய் கிழமை அன்று புதிதாக கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எவரும் இல்லை என்று கேரளா முதல்வர் பினராயி விஜயன் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் கேரள காவல்துறையினர் கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்ள செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நடனம் ஆடி, நடன அசைவுகளின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்

தற்போதைய கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள உலக சுகாதார அமைப்பு மற்றும் யுனிசெஃப் போன்ற பல சர்வதேச சுகாதார நிறுவனங்கள் கைகளைக் கழுவுமாறு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளன.

நடைமுறையை ஊக்குவிப்பதற்கும், கைகளை கழுவுவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதற்கும், கேரளாவில் காவல் துறையை சேர்ந்த 6 காவலர்கள் மக்கள் கைகளை எப்படி கழுவ வேண்டும் என்பதை  நடன அசைவின் மூலம் காட்டியுள்ளனர்.

முகமூடி அணிந்துக்கொண்டு கொரோனா பாதிப்பிலிருந்து தப்பிக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் போலீசாரின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

POLICE, CORONAVIRUS, KERALA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்