'நீ கேட்டா எங்க வீட்டு பொண்ண கொடுக்கணுமா'?... 'வழியை மறித்து பொண்ணு கேட்ட இளைஞர்'... காதலியின் சித்தப்பா செய்த பயங்கரம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇளைஞரின் காதல் விவகாரம் ஒன்று மரணத்தில் சென்று முடிந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் ஆலூர் தாலுகா சுவப்பினஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மது. 29 வயது இளைஞரான இவருக்கும் மைனர் பெண் ஒருவருக்கும் கடந்த வருடம் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் பல்வேறு இடங்களுக்குச் சென்று தங்களது காதலை வளர்த்து வந்தனர். ஒரு கட்டத்தில் இவர்களின் காதல் விவகாரம், மைனர் பெண்ணின் பெற்றோருக்குத் தெரியவந்தது. ஆனால் மது வேறு சாதியைச் சேர்ந்தவர் என்பதால், மைனர் பெண்ணின் பெற்றோர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த சூழ்நிலையில் கடந்த வருடம் மது தனது காதலியான மைனர் பெண்ணை வெளியூருக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து மைனர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதற்கிடையே தங்களது மகளை மது கடத்தி சென்று விட்டதாக, மைனர் பெண்ணின் பெற்றோர் ஆலூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுவைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் மைனர் பெண்ணை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு மது, ஜாமீனில் ஜெயிலில் இருந்து வெளியே வந்து இருந்தார். இதையடுத்து அவர் தனது காதலியான மைனர் பெண்ணின் வீட்டிற்குச் சென்று, உங்கள் மகளை எனக்குத் திருமணம் செய்து கொடுங்கள் என்று மைனர் பெண்ணின் பெற்றோரிடம் கேட்டு உள்ளார். ஆனால் அவர்கள் திருமணம் செய்து கொடுக்க மறுத்து விட்டனர். ஆனாலும் மைனர் பெண்ணை, தனக்குத் திருமணம் செய்து கொடுக்கும்படி மது தொடர்ந்து வற்புறுத்தி வந்து உள்ளார்.
இந்நிலையில் நேற்று மதியம் காதலியின் வீட்டின் அருகே மது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மைனர் பெண்ணின் சித்தப்பாவான ரூபேஷ், மதுவைக் கண்டித்துள்ளார். அப்போதும் ரூபேஸிடம் பெண்ணை திருமணம் செய்து கொடுக்கும்படி பிரச்சனை செய்துள்ளார். இதனால் அவர்கள் இடையே வாக்குவாதம் உண்டானது. இந்த சந்தர்ப்பத்தில் திடீரென வீட்டிற்குள் சென்ற ரூபேஷ், துப்பாக்கியை எடுத்து வந்து மதுவைச் சுட்டார்.
இதில் மார்பில் குண்டு துளைத்ததில் மது சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரூபேஷ் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆலூர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மதுவின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக ஆலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தப்பி சென்ற ரூபேஸை போலீசார் தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'என்னை ஜெயிலுக்கு அனுப்பிட்டு... நீங்க ஜாலியா வெளில சுத்திட்டு இருக்கீங்களா'!? பழிக்குப் பழி தீர்க்க... டிராக்டரால் உடலை சிதைத்து... அம்மா-மகள் கொடூரக் கொலை!
- 'சிறுவன் அடித்த சிக்ஸர்'... 'பந்து விழுந்த இடத்திலிருந்த தண்ணீர் டிரம்'... 'திறந்ததும் அலறிய சிறுவர்கள்'... ஈரக்கொலையை நடுங்க வைக்கும் சம்பவம்!
- பசங்க, பொண்டாட்டிய 'கொலை' பண்ணிட்டேன்... போன் போட்டு சொன்ன கணவர்... வீட்டுக்கு சென்று 'உறைந்து' போன உறவினர்கள்!
- "மிட்டாய் வாங்க போறேன்னு காலையில கெளம்புனவ"... 'கடைசி'யில இப்டி தான் எங்க 'பொண்ண' பாக்கணுமா ஆண்டவா??... 'தண்ணீர் ட்ரம்'மிற்குள் சடலமாக கிடந்த 7 வயது சிறுமி!!!
- “பொண்டாட்டிய கொல்வது எப்படி.. கூலிப்படை எங்க கெடைப்பாங்க?”.. காட்டிக் கொடுத்த சர்ச் ஹிஸ்டரி.. மனைவிக்கு நேர்ந்த சோகம்... அதிர்ச்சியை ஏற்படுத்தும் ‘காரணம்’!
- "'திருடன்-போலீஸ்' விளையாட வான்னு சொன்னா... 'வீடியோ' பாத்துட்டு இருக்கியா??" - அப்பா 'துப்பாக்கி'ய எடுத்து 'தம்பி'யோட பின்மண்டையில சுட்ட 'அண்ணன்'!!! - '9 வயது' சிறுவனுக்கு நடந்த ’கொடூரம்’!!!
- 'மாஸ்க் போடுங்கனு சொன்னது தப்பா?'.. 'ஆமா... தப்பு தான்!'.. வெறிபிடித்த இளைஞரால் பரிதாபமாக உயிரிழந்த 18 வயது பெண்!.. பகீர் பின்னணி!
- VIDEO : கொல வெறியோட மொத்தம் 28 'கத்தி'குத்து... "நாங்க 'பைக்' ரேஸ் பண்ணா உனக்கு என்ன வந்துச்சு???"... '17' வயது சிறுவர்கள் செய்த கொடூரம்... பதறவைக்கும் 'CCTV' காட்சி!!
- 'அன்னைக்கு ராத்திரி... நானும் 'அவளும்' ஒன்னா தான் சரக்கு அடிச்சோம்!.. மட்டையாறதுக்கு கொஞ்சம் நேரம் முன்னாடி'... 55 வயது பெண்ணின் கள்ளக்காதலன் வெறிச்செயல்!
- 'மனைவியை கொலை செய்து... 'ஆத்திரம்' அடங்காமல், மாமனாரையும் குத்தி, அவர் 'பிறப்பு உறுப்பை' சிதைத்து கொன்ற கொடூரன்!' - நெஞ்சடைக்கும் 'அதிர்ச்சி' சம்பவம்!