"சார்... நாங்க இருக்கோம்..." 'இலவசமா' கொரோனா 'பரிசோதனை' பண்றோம்... 'அப்டின்னு சொல்வாங்க...' 'கிளிக் பண்ணிடாதிங்க...'
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனாவால் அச்சுறுத்தல் உச்சத்தில் இருக்கு இந்த நேரத்தில்தான் சைபர் மோசடிக் கும்பல்கள் துடிப்புடன் இயங்கிவருகின்றன. எப்போதையும்விட work from home-இல் நாம் அதிகம் இணையத்தைப் பயன்படுத்தப்படும் இந்த சூழலை பயன்படுத்தி போலி இணையதளங்கள், மோசடி அழைப்புகள், எஸ்.எம்.எஸ் எனப் பல வழிகளில் இந்த சைபர் மோசடிகள் நடக்கின்றன.
தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்குக் கீழ் செயல்படும் சைபர் பாதுகாப்பு அமைப்பான Indian Computer Emergency Response Team (CERT-In) வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `இந்தியாவில் பெருமளவில் சைபர் மோசடிகளை மேற்கொள்ள ஒரு கும்பல் திட்டமிட்டிருக்கிறது. அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மோசடி என்பது போலி இ-மெயில்கள் மூலம் நடந்துவருகிறது. கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் உள்ளூர் அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் பெயரில், COVID -19 தடுப்புக்காக உதவி கேட்பது போல இந்த மெயில்கள் அனுப்பப்படலாம்.
இதில் வரும் லிங்க்கை கிளிக் செய்தால் அது உங்களை ஒரு போலி இணையதளத்திற்குக் கொண்டு செல்லும். அதில் மலிஷியஸ் வைரஸ்கள் உங்கள் சாதனங்களில் பதிவிறக்கப்படலாம் அல்லது உங்களது தனிப்பட்ட தகவல்கள் திருடப்படலாம்.
``Free COVID-19 tests for all residents of Delhi, Mumbai, Hyderabad, Chennai and Ahmedabad" போன்ற தலைப்புகளுடன் இந்த மெயில்கள் வரும். எக்காரணத்திற்காகவும் அதில் இருக்கும் லிங்க்களை கிளிக் செய்துவிட வேண்டாம், தனிப்பட்ட தகவல்களைக் கொடுத்துவிட வேண்டாம் இதுபோன்ற சைபர் தாக்குதல்கள் ஜூன் மாதம் முதல் நடந்துவருகிறது" என்கிறது அந்த அறிக்கை.
கொரோனா சோதனைகளின் பெயரில் மோசடி மெயில்கள் வந்தால் உடனடியாக incident@cert-in.org.in என்ற மெயிலுக்கு ரிப்போர்ட் செய்யும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டாரு... காப்பாத்திடலாம்னு நினைச்சப்ப தான்... அவர் மரண செய்தியோட சேர்த்து 'இந்த' அதிர்ச்சி தகவலும் வந்துச்சு!
- மதுரையில் 2 ஆயிரத்தை நெருங்கியது பாதிப்பு எண்ணிக்கை!.. ராமநாதபுரத்தில் இன்று 83 பேருக்கு தொற்று!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- ஒன்றரை வயது குழந்தை உட்பட 54 உயிர்களை ஒரே நாளில் கொலையுண்ட கொரோனா!.. தமிழகத்தில் 80 ஆயிரத்தை கடந்த பாதிப்பு எண்ணிக்கை!.. முழு விவரம் உள்ளே
- தனியார் பள்ளி 'கல்விக்கட்டணம்' குறைக்கப்படுமா?... நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட 'முக்கிய' முடிவு!
- ‘தடபுடலா நடந்த கல்யாணம்’.. அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி.. அதிரடி ‘ஆக்ஷனில்’ இறங்கிய அதிகாரிகள்..!
- VIDEO: ‘இந்த கொடுமை யாருக்கும் வரக்கூடாது’.. கொதித்த ‘ஜெகன்மோகன்’.. ஆந்திராவை அதிரவைத்த வீடியோ..!
- "இங்கயும் கொரோனா வந்துடுச்சு... 2 நாளைக்கு முதல்வர் ஆபீஸ் க்ளோஸ்.. யாரும் வராதீங்க!".. அதிரடியாக அறிவித்த முதல்வர்!
- “எந்த பக்கம் போனாலும் கேட் போடுறாங்களே!”.. மதுரை டூ சிவகங்கை.. சிவகங்கை டூ சோழவந்தான்.. படையெடுக்கும் மதுபிரியர்கள்!
- 'கொரோனாவை' எதிர்க்க உதவும் 'டி-செல்கள்' சிகிச்சை... 'புதிய வழிமுறைகள்' குறித்த 'ஆராய்ச்சி' முடிவுகள் 'வெளியீடு...'
- 'டெல்லிக்கு' காத்திருக்கும் 'ஆபத்து...' '48 மணி நேரம் எச்சரிக்கை...' 'குர்கான்' வரை நெருங்கிவிட்டதாக 'அதிர்ச்சித் தகவல்...'