'வேலை தேடும் இளைஞர்களின் அடிமடியில் கைவைத்த சைபர் கிரிமினல்கள்'... 'டார்க் வெப்பில் செஞ்ச அட்டூழியம்'... வெளியான தகவல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனாவால் வேலை குறித்த அச்சம் மற்றும் பொருளாதார நெருக்கடி எனப் பலரும் தவித்து வரும் நிலையில், சைபர் குற்றவாளிகளும் தங்களின் பங்கிற்கு, அதிர்ச்சி காரியம் ஒன்றைச் செய்துள்ளார்கள்.

Advertising
Advertising

இந்தியாவில் வேலை தேடும் சுமார் 2.9 கோடிக்கும் அதிகமான நபர்கள் தங்களது தகவல்களை ரெஸ்யூம் மூலம் இணையத்தில் பதிவேற்றம் செய்து வைத்துள்ளார்கள். இந்த தரவுகளை சைபர் குற்றவாளிகள் டார்க் வெப்பில் (Dark Web) இலவசமாக வெளியிட்டுள்ளதாக ஆன்லைன் உளவு நிறுவனமான சைபிள் (Cyble) அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

சைபிள் வெளியிட்டுள்ள தகவலில், ''இந்தியாவில் வேலை தேடும் 2.9 கோடிக்கும் அதிகமானவர்களின் தனிப்பட்ட விவரங்கள் டார்க் வெப்பில் இலவசமாக லீக் ஆகியுள்ளது. அவ்வாறு வெளியான தகவல்களில் நிறையத் தனிப்பட்ட விவரங்கள் உள்ளன. குறிப்பாக அவர்கள் படித்த இடம், மற்றும் தனிப்பட்ட முகவரிகள் இடம்பெற்றுள்ளது.

இதில் அதிரவைக்கும் விஷயம் என்னவென்றால், இந்த சைபர் திருட்டு மூலம், தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரி, தனிப்பட்ட தொலைப்பேசி எண், வீட்டு முகவரி, தகுதி, பணி அனுபவம் போன்ற முக்கியமான தகவல்களும் லீக் ஆகியுள்ளது. இதில் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அளிக்கும் விஷயம் என்னவென்றால் சைபிள் வெளியிட்ட தகவலில், இந்தியாவின் சில முன்னணி வேலைவாய்ப்பு இணையதளங்கள் குறித்த தகவல்களும் அதில் இடம்பெற்றுள்ளது.

இதில் சைபர் குற்றவாளிகளுக்கு என்ன லாபம் என்றால், ''தனிப்பட்ட நபர்களின் அடையாள திருட்டு, மோசடி மற்றும் கார்ப்பரேட் உளவு போன்ற குற்றங்களில் ஈடுபட, சைபர் குற்றவாளிகள் இதுபோன்ற தனிப்பட்ட தகவல்களைத் தேடுகிறார்கள்'' என சைபிள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்