புதைந்து போனவர்.. ‘பூமியைத் தோண்டி உயிருடன் மீட்பு..’ மோப்பம் பிடித்த நாய்க்கு குவியும் பாராட்டுகள்..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

காஷ்மீரில் நிலச்சரிவால் பூமிக்குள் புதைந்தவர் மோப்ப நாய் உதவியால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

காஷ்மீரில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது. இதனால் ஜம்மு வழியாக செல்லும் அமர்நாத் யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராம்பன் மாவட்டத்தில் பன்தியால் பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அங்கு சென்ற போலீஸார் நிலச்சரிவு ஏற்பட்ட சாலையைச் சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ரிசர்வ் படை மோப்ப நாய் ஒன்று கடுமையாகக் குரைத்துள்ளது.

அதைக் கேட்டு போலீஸார் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது நிலச்சரிவில் சிக்கி ஒருவர் பூமிக்குள் புதைந்திருந்துள்ளார். அவர்கள் உடனடியாக அவர் இருந்த பகுதியை சுற்றிலும் தோண்டி அவரை உயிருடன் மீட்டுள்ளனர். இந்தக் காட்சிகள் தற்போது வைரலாகி வரும் நிலையில் சரியான நேரத்தில் மோப்பம் பிடித்து அவரை மீட்க உதவிய நாய்க்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

 

JAMMUANDKASHMIR, LANDSLIDE, CRPF, DOG, AJAXI, VIRAL, VIDEO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்