'வழியெங்கும் கண்ணிவெடி'... 'தேசத்தையே நெகிழ செய்த 'சி.ஆர்.பி.எஃப்' வீரர்கள்'...வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவனை,சிஆர்பிஎஃப் வீரர்கள் தூக்கி சென்ற சம்பவம் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டம் நக்சல்கள் அதிகம் நிறைந்த பகுதியாகும். இந்த இந்த மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில்,13 வயது சிறுவன் மஞ்சள் காமாலை நோயினால் அவதிப்பட்டு வந்தான்.சாலை மற்றும் மருத்துவ வசதி இல்லாத காரணத்தால்,சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் பெரும் சிரமம் நிலவியது.இந்நிலையில் சி.ஆர்.பி.எஃப் படை பிரிவை சேர்ந்த வீரர்கள் அந்த பகுதியில் வழக்கமான ரோந்து பணிகளில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள்.அப்போது சிறுவனின் நிலை குறித்து வீரர்களுக்கு தெரிய வந்தது.

இதையடுத்து சிஆர்பிஎஃப் வீரர்கள் உடனடியாக சிறுவனுக்கு உதவ முன்வந்தார்கள். சாலை போக்குவரத்து முற்றிலுமாக இல்லாத நிலையிலும்,சோர்வாக நடக்க முடியாமல் தவித்த அந்த சிறுவனை கட்டிலில் வைத்து சுமந்து கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்தார்கள்.இதையடுத்து ஒரு கட்டிலில் சிறுவனை உட்கார வைத்து இரு சிஆர்பிஎஃப் வீரர்கள் என நான்கு பேர் மாறி‌மாறி எட்டு கிலோ மீட்டர் வரை சுமந்து சென்றனர்.

நக்சல் பாதிக்கப்பட்ட பகுதி என்பதால் செல்லும் வழியில் வெடிகுண்டுகள் ‌இருக்கின்றனவா என்று சோதனை செய்தவாரே அவர்கள் சென்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும் இது தொடர்பான வீடியோ காட்சிகளை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.இதையடுத்து வீரர்களின் செயலினை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

CRPFJAWANS, CRPF, CHHATTISGARH, 231 BATTALION, SUKMA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்