"எதிர்காலத்துல என்ன வேணா நடக்கலாம்.. அது ஒன்னு தான் நமக்கு இருக்குற ஒரே வழி".. இந்திய ராணுவ ஜெனரல் பரபரப்பு தகவல்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஒரு பக்கம் ரஷ்யா உக்ரைன் போர் உச்சகட்டத்தை எட்டி உள்ள நிலையில், டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய ராணுவ ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே சொல்லிய தகவல்கள் இப்போது இந்தியா முழுவதும் வைரலாக பேசப்பட்டு வருகின்றன.

Advertising
>
Advertising

போர்

உக்ரைனின் நேட்டோ இணைப்பு கருத்தை கடுமையாக எதிர்த்து வந்த ரஷ்யா கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது போர் தொடுப்பதாக அறிவித்தது. 14 ஆம் நாளான இன்று வரை உக்ரைனில் ரஷ்ய படைகள் களமாடிக்கொண்டு இருக்கின்றன.

இதுகுறித்து வீடியோ உரையில் பேசிய உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ்," ரஷ்ய இராணுவ நடவடிக்கைகளால் குறைந்தது 400 பொதுமக்களின் இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரஷ்ய ராணுவம் 200 க்கும் மேற்பட்ட உக்ரேனிய பள்ளிகள், 34 மருத்துவமனைகள் மற்றும் 1,500 குடியிருப்பு கட்டிடங்களை அழித்துள்ளன" என அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருக்கும் இந்த வேளையில் இந்திய நாடு மிக முக்கிய பாடத்தை இதன்மூலம் கற்றுக்கொண்டதாக இந்திய ராணுவ ஜெனரல் நரவனே கூறியுள்ளார். மேலும், "எதிர்கால போர்களில் நாம் நம்முடைய நாட்டில் உருவாக்கப்பட்ட ஆயுதங்களை மட்டுமே பயன்படுத்தும் அளவிற்கு வளர வேண்டும்" என அவர் குறிப்பிட்டார்.

பாடம்

இதுகுறித்து அவர் பேசுகையில்," வருங்காலப் போர்களில் உள்நாட்டு ஆயுதங்களைக் கொண்டு போராட நாம் தயாராக இருக்க வேண்டும் என்பது மிகப்பெரிய பாடம். பாதுகாப்பில் ஆத்மநிர்பர் பாரத் (உள்நாட்டு தயாரிப்பு திட்டம்) நோக்கிய நடவடிக்கைகள் இன்னும் அவசரமாக எடுக்கப்பட வேண்டும். எதிர்கால போர்கள் சொந்த ஆயுத அமைப்புகளுடன் போராட வேண்டும்" என்றார்.

மேலும், "தற்போது நடைபெற்று வரும் உக்ரைன்-ரஷ்ய போரில் இருந்து கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள் ஏராளம். எந்த நேரத்திலும் போர்கள் நிகழலாம் என்பதையும், அவற்றிற்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என்பதையும் நெருக்கடி காட்டுகிறது" என நரவனே குறிப்பிட்டார்.

ரஷ்யா - உக்ரைன் போர் உச்சம் அடைந்து இருக்கும் இந்த நிலையில் இந்திய ராணுவ ஜெனரல் சொல்லி இருக்கும் தகவல்கள் இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.

RUSSIA, UKRAINE, INDIANARMY, ரஷ்யா, உக்ரைன், இந்தியராணுவம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்