கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினுக்கு... வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு குறைப்பு... காரணம் என்ன?
முகப்பு > செய்திகள் > இந்தியாகிரிகெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை மராட்டிய மாநில அரசு விலக்கிக் கொண்டுள்ளது.
கிரிக்கெட் ஜாம்பவனான சச்சின் டெண்டுல்கர், மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்திய அணியில் இருந்த போதிலும் சரி, ஓய்வு பெற்றப் பிறகும் சரி, சச்சின் டெண்டுல்கருக்கு மத்திய, மாநில அரசுகள் சிறப்பு பாதுகாப்புகள் வழங்கி வந்தன. இந்நிலையில், சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை மராட்டிய அரசு திரும்ப பெற்றுள்ளது. சச்சின் டெண்டுல்கருக்கு இதுநாள் வரை ‘எக்ஸ்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.
‘எக்ஸ்’ பிரிவின் கீழ் 24 மணி நேரமும் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் பாதுகாப்பு வழங்கும் பணியில் இருப்பார். இப்போது அது திரும்பப் பெற்றுள்ளது. இதேபோல், பாஜக தலைவர் எக்நாத் காட்சேவுக்கு வழங்கப்பட்டு வந்த ஒய் பிரிவு பாதுகாப்பும் திரும்ப பெறப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச முன்னாள் கவர்னர் ராம்நாயக்கிற்கு வழங்கப்பட்டு வந்த இசட் பிளஸ் பாதுகாப்பு, ‘எக்ஸ்’ பிரிவு பாதுகாப்பாக குறைக்கப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுக்கு வழங்கப்பட்ட ஒய் பிளஸ் பாதுகாப்பு, இசட் பிரிவு பாதுகாப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகனும், எம்.எல்.ஏ.வுமான ஆதித்ய தாக்கரேவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. முக்கிய பிரமுகர்களுக்கு உள்ள அச்சுறுத்தல் படி அவ்வப்போது பாதுகாப்பு மறு ஆய்வு செய்யப்பட்டு, அதன்படி பாதுகாப்பு வழங்கப்படும் என்று மூத்த ஐபிஎஸ் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Video: சச்சின் தேடிய அந்த 'தமிழர்' இவர் தான்... நினைச்சுக் கூட 'பார்க்க' முடியல... நெகிழும் 'சென்னை' ரசிகர்!
- 'வீடியோவால் பரபரப்பு'.. 'பிரபல ஐ.டி நிறுவன' தமிழக செக்யூரிட்டியை சகட்டு மேனிக்கு தாக்கும் பிற மாநில செக்யூரிட்டிகள்?
- ‘கையில பட்டாக்கத்தி’.. விரட்டி விரட்டி தாக்கிய மர்மநபர்கள்..! பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சி..!
- ‘இலங்கை அணிக்கு அளித்துவரும் பாதுகாப்பு குறித்து’.. ‘கம்பீர் கிண்டல் ட்வீட்’.. ‘வைரலாகும் வீடியோ’..
- ‘இப்படி ட்ரெஸ் பண்ணா தான் மாப்பிள்ளை கிடைக்கும்’.. ‘கல்லூரி செய்த அதிர்ச்சிக் காரியம்’.. ‘வைரலாகும் வீடியோ’..
- 'உருவம்.. வயசு.. நடத்தை'.. '3க்கும் சம்மந்தமே இல்ல.. அதவெச்சு பிடிச்சோம்'.. பரபரப்பு சம்பவம்!
- '200 டெஸ்ட்டில் சச்சின் செய்த சாதனையை'... '66 டெஸ்ட்டில் சமன் செய்த வீரர்'!
- ‘செக்யூரிட்டிகளை சரமாரியாகத் தாக்கிய இளைஞர் கும்பல்..’ காரை அனுமதிக்காததால் நடந்த பரிதாபம்..
- ‘அப்படியே சச்சின் ஆடுறத பாக்கற மாதிரியே இருக்கு..’ பிரபல வீரரைப் புகழ்ந்த பயிற்சியாளர்..?
- முறியடிக்க முடியாத சச்சினின் 16 வருட சாதனை - காத்திருக்கும் சவால்.. முறியடிப்பாரா கோலி..?