"மேல டச் பண்ண கூடாது ஓகே!".. 'தனிமனித' இடைவெளியுடன் பயணிக்கும் 'குரங்கு!'.. வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மேற்கு வங்கத்தில் குரங்கு ஒன்று பயணிகளுடன் பேருந்தில் பயணம் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

Advertising
Advertising

கொரோனா நோய் பரவல் காரணமாக மேற்கு வங்கத்தில் இரண்டு மாதங்களுக்கு பின்னர் தற்போதுதான், பேருந்து உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் முகக் கவசம் அணிந்து தனி மனித இடைவெளியுடன் பேருந்தில் பயணிக்க மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். 

இந்நிலையில் அனுமன் மந்தி வகையை சேர்ந்த குரங்கு ஒன்று தலைநகர் கொல்கத்தா அருகே உள்ள வால்பூர் என்கிற தடத்தில் சென்ற அரசு புறநகர்ப் பேருந்தில் பயணிகளுடன் பயணியாக, ஆர்ப்பாட்டம், சேட்டைகள் எதுவும் செய்யாமல் அமைதியான முறையில் அழகாக பயணம் செய்தது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை தொடர்ந்து, குரங்கு பயணச்சீட்டு எடுத்ததா? என்றும் குரங்கு முகக்கவசம் அணியவில்லை..

கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறிவிட்டது போல் தெரிகிறதே? என்றும் ஏராளமானோர் நகைச்சுவையாக பதிவிட்டு வருகின்றனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்