கோவிஷீல்டு 2ம் டோஸ் இடைவெளியை அதிகரித்தது ஏன்?.. பூதாகரமான சர்ச்சை!.. இடைவெளியை குறைக்க திட்டம்!?.. குழப்பத்தில் மக்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோசுகளுக்கு இடையேயான இடைவெளி 12 முதல் 16 வாரங்களாக உயர்த்தப்பட்டிருக்கும் நிலையில், மக்களுக்கு பலன் கிடைக்கும் என்றால் இந்த இடைவெளியை குறைக்க மத்திய அரசு முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சோதனை தரவுகளின் அடிப்படையில் முதலில் கோவிஷீல்டு தடுப்பூசி இடைவெளி 4 வாரங்களாகவும், அதன் பின்னர் கூடுதலாக கிடைத்த அறிவியல் மற்றும் ஆய்வக தரவுகளின் அடிப்படையில், எட்டு வாரங்களாகவும் நீட்டிக்கப்பட்டது. இடைவெளி 4 வாரங்களாக இருந்தால் தடுப்பூசியின் திறன் 57 விழுக்காடாகவும், 8 வாரங்களாக இருந்தால் 60 விழுக்காடாகவும் இருக்கும் என்ற தரவுகளின் அடிப்படையில் அந்த மாற்றம் செய்யப்பட்டது என தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப குழுவின் தலைவர் டாக்டர் என்.கே. அரோரா குறிப்ப்ட்டார்.
பிறகு, பிரிட்டனில் உள்ள நடைமுறை ஆதாரங்களை பின்பற்றி, இந்த குழுவின் பரிந்துரையின் பேரில், இடைவெளியானது 12 முதல் 16 வாரங்களாக அதிகரிக்கப்பட்டது. அதில் நிபுணர்களுக்கு மாற்று கருத்து இல்லை என அரசு விளக்கம் அளித்தாலும், இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தடுப்பூசி டோஸ்களுக்கு இடையிலான இடைவெளி முக்கியமானதாகும். ஏனெனில், முதல் டோஸ் போடப்பட்ட உடன் உடலில் ஆன்டிபாடீஸ் எனப்படும் நோய் எதிர்ப்புத் திறன் உருவாகிறது. இரண்டாவது டோஸ் அதை வலுப்படுத்துகிறது. இரண்டாவது டோஸ் தள்ளிப்போனால் முதல் டோசுக்கு கூடுதலாக செயல்படுவதற்கான அவகாசம் கிடைக்கும். எனவே, பிரிட்டன் தனது தடுப்பூசி திட்டத்தை கடந்த டிசம்பரில் ஆரம்பிக்கும் போதே இடைவெளியை 12 வாரங்களாக முடிவுசெய்து விட்டது.
இந்த நிலையில், இந்தியா இடைவெளியை 12 முதல் 16 வாரங்களாக அதிகரித்த 2, 3 நாட்களுக்குப் பிறகு நடத்தப்பட்ட புதிய ஆய்வுகளில், கோவிஷீல்டின் சிங்கிள் டோஸ் 33 சதவிகித பாதுகாப்பை மட்டுமே தருவதாக கூறப்படுகிறது. மேலும், அது எதிர்பார்த்தபடி 65 முதல் 85 விழுக்காடு பாதுகாப்பை தராது என கூறப்படுவதால் பல நாடுகள் இந்த இடைவெளியை மீண்டும் குறைத்து வருகின்றன. அந்த வகையில், இந்தியாவிலும் அது குறைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆனால், மக்களின் பாதுகாப்பை கருதி மட்டுமே இந்த விவகாரத்தில் அரசு எந்த முடிவையும் எடுக்கும். இடைவெளியை குறைத்தால் மக்களுக்கு நல்லது என நாளையே தெரிய வருமானால், இடைவெளியை குறைக்க அரசு முன்வரும். அவ்வாறு இல்லை என்றால் இப்போது உள்ள இடைவெளியே தொடரும் என டாக்டர் அரோரா தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ச்சே, என்னா மனுஷன் சார்'... 'பாட்டியை போட்டோ எடுத்த கையேடு போட்டோகிராபர் செய்த செயல்'... நெகிழவைக்கும் சம்பவம்!
- 'Dude கொரோனான்னு ஒண்ணு இல்ல'... 'இனியும் அப்படி சொல்லாதீங்க'... '3-வது அலையின் முக்கிய டார்கெட் இவங்க தான்'... மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!
- ஜெட் வேகத்துல 'டெல்டா பிளஸ்' பரவிட்டு இருக்கு...! 'இந்த நேரத்துல ஊரடங்கை தளர்த்துறது பெரிய ஆபத்துல போய் முடியும்...' அதிரடி 'முடிவு' எடுத்த நாடு...!
- செய்ய வேண்டியத 'சிறப்பா' செய்தாச்சு...! 'இனி தைரியமா போய் பணம் எடுங்க...' -ATM செக்யூரிட்டியின் நம்பிக்கை...!
- ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள்!.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு!.. முழு விவரம் உள்ளே
- எதுக்கு நாம 'ரிஸ்க்' எடுக்கணும்...! ஒரு வாரத்துக்காவது 'இந்தியால' இருந்து 'அத' வாங்காதீங்கப்பா...! ஏன்னா 'அந்த' பாக்கெட்ல 'செக்' பண்ணி பார்த்தப்போ... - சீனாவின் அதிரடி உத்தரவு...!
- 'இதுல கூட வைரஸ் தொற்று இருக்கா'... 'அரண்டு போன சீனா'... இந்தியாவிலிருந்து வரும் மீன்களுக்கு தடை!
- தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு!.. புதிய தளர்வுகள் அறிவிப்பு!.. என்னென்ன இயங்கும்?.. எவற்றுக்கு தடை?
- என்ன இப்படி இறங்கிட்டாங்க...? 'வைரலான திருமண விளம்பரம்...' - கடைசியில தெரிய வந்த ட்விஸ்ட்...!
- நாங்க 'டெஸ்லா' கார் தர்றோம்...! உங்களுக்கு 'ஐ-போன்' வேணுமா...? இதென்ன பிரமாதம்...! 'தங்கக்கட்டியே வாங்கிட்டு போலாம்...' - ஆனா நீங்க பண்ண வேண்டியது 'அது' மட்டும் தான்...!