தடுப்பூசில இப்படி ஒரு ட்விஸ்டா?.. கோவாக்சின் & கோவிஷீல்டு போட்டவர்களுக்கு... 2வது டோஸில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஒரு டோஸ் கோவாக்சின் தடுப்பூசி, மற்றொரு டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி என வேறுவேறு தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டால் அபிரிவிதமான பலன்கள் உருவாவதாக ஐசிஎம்ஆர் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளது.

இந்தியாவின் மருந்து ஒழுங்குபடுத்தும் நிபுணர் குழுவான டிசிஜிஐ (DCGI), கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை கலந்து பயன்படுத்துவது குறித்து ஆய்வு நடத்த கடந்த மாதம் பரிந்துரைத்தது.

                             

அடினோவைரஸ் வெக்டர் (Adenovirus vector) பிளாட்ஃபார்ம் அடிப்படையிலான ஆய்வில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை இணைத்து பயன்படுத்தினால் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும் என்றும், இருவேறு தடுப்பூசிகளை மாற்றி செலுத்திக்கொள்வது பாதுகாப்பானது என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) ஆய்வு தெரிவித்திருக்கிறது.

வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (சிஎம்சி) இத்தகைய ஆய்வை நடத்த அனுமதி கோரிய பிறகு டிசிஜிஐ இந்த பரிந்துரையை செய்தது. எஸ்இசி (பொருள் வல்லுநர் குழு) நடத்திய விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகு, கொரோனா தடுப்பூசிகளான கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசியை கலந்து 300 ஆரோக்கியமான தன்னார்வலர்களிடம் 4வது கட்ட மருத்துவ பரிசோதனை செய்ய வேலூர் சிஎம்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்