‘கொரோனா பரவலை தடுக்கணும்’!.. ‘தேவையில்லாம யாரையும் வெளியே போகவிடமாட்டேன்’.. கையில் கட்டையுடன் இளம்பெண் எடுத்த அதிரடி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாதனது கிராமத்தில் கொரோனா பரவாமல் தடுக்க ஊர் எல்லையில் இளம்பெண் ஒருவர் காவல் காக்கும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மதனபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அகிலா யாதவ் (23). பட்டதாரியான இவர் கிராம தலைவராகவும் உள்ளார். இந்த நிலையில் தங்கள் கிராமத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, கையில் கட்டையுடன் ஊர் எல்லை காவல் காத்து வருகிறார். தேவையில்லாமல் யாரும் ஊருக்கு உள்ளே வராமலும், வெளியே செல்லாமலும் பார்த்துக் கொள்கிறார்.
இதுகுறித்து தெரிவித்த அகிலா, ‘ஆரம்பத்தில் லாக் டவுனை பொதுமக்கள் யாரும் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. சிலர் கிராமத்தில் இருந்து தேவையில்லாமல் வெளியே செல்வதை காணமுடிந்தது. இதனால் கிராமத்தில் எல்லையில் தடுப்பு அமைத்து காவல் காக்க அங்கு அமர்ந்துகொண்டேன். ஊருக்கு உள்ளே வருபவர்கள் மற்றும் வெளியே செல்பவர்களிடம் என்ன காரணம்? எதற்காக செல்கிறீர்கள்? என கேட்பேன். அது தேவையான ஒன்றாக இருந்தால் மட்டுமே செல்ல அனுமதிப்பேன். இல்லையென்றால் அப்படியே திரும்பிப்போக அறிவுறுத்துகிறேன்.
நம்மை காத்துக்கொள்ள இதுதான் சரியான சமயம். நமது சொந்தங்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படாமல் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும். எனது கிராமத்தை பாதுகாக்க என்னால் முடிந்த சிறிய விஷயத்தை செய்கிறேன். யாராவது ஒருவருக்கு வந்துவிட்டால் ஒட்டுமொத்த கிராமத்தையும் பாதித்துவிடும்.
எங்கள் ஊருக்குள் புதிய வாகனமோ அல்லது புதிய முகங்களோ வருவது தெரிந்தால் அவர்களிடம் தீவிரமாக விசாரிப்பேன். குறிப்பாக நகரத்தில் இருந்து வருபவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறேன். பொதுமக்கள் வைரஸ் பாதிப்பிற்கான அறிகுறிகளை தெரிந்துகொள்ள வேண்டும். எங்கள் கிராமத்தில் 1600 பேர் இருக்கின்றனர். அவர்களுக்கு சுமார் 2000 முகக்கவசங்கள் விநியோகம் செய்துள்ளோம்’ என அகிலா தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “யாராச்சும் ஏப்ரல் 1-ஆம் தேதி முட்டாள் தினம்னு, கொரோனா நேரத்துல இதெலாம் பண்ணீங்க” .. எச்சரித்த அமைச்சர்!
- “மணிக்கு ஒரு முறை செஃல்பி எடுத்து அனுப்புங்க!”.. ‘வீட்லயே தனிமைப்படுத்திக் கொண்டவர்களுக்கு’ .. அமைச்சர் அதிரடி!
- ‘இத்தாலியில் இருந்து வந்த மகன் குடும்பத்தால் பாதிப்பு’... ‘90 வயதில் கொரோனாவை வென்று’... ‘நாட்டுக்கே நம்பிக்கையூட்டிய முதிய தம்பதி’... ‘கைதட்டி ஆரவாரம் செய்த கேரளா மருத்துவர்கள்’... ‘ஆனாலும் செவிலியருக்கு நேர்ந்த சோகம்’!
- 'உலகத்துக்கு துரோகம் செய்ததா சீனா!?'... சர்வதேச மனித உரிமை அமைப்புகள் சரமாரி கேள்வி!... என்ன செய்யப்போகிறது சீன அரசு?
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்!
- '2000 பேர்' பங்கேற்ற 'மத நிகழ்ச்சி'... '200' பேருக்கு 'வைரஸ் தொற்று'... 'தமிழகத்திலிருந்து' பங்கேற்ற '82 பேருக்கு' அறிகுறி...
- 'சடலங்களை புதைக்க பிரமாண்டமான இடுகாடு...' 'கொரோனா வைரஸினால் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மரணம்...' 'புதிய அமைதி பள்ளத்தாக்கு' என பெயர் சூட்டிய ஈராக்...!
- "இது ரொம்ப பலவீனமா இருக்கு..." "மரபணுவில் வேறுபாடு இருக்கிறது..." "32 டிகிரி வெயிலில் அழிந்து விடும்..." 'நம்பிக்கை' தரும் 'மருத்துவர்...'
- பல ஆயிரம் வருசமா 'ரெண்டு' உயிரினங்கள் உடம்புல வாழ்ந்திட்டு வந்துருக்கு...! 'மூன்றாவது தான் மனுஷன்...' கொரோனா வைரஸ் குறித்து சீன ஆராய்ச்சியாளர்கள் அறிக்கை...!
- கொஞ்சம் கூட 'பாலோ' பண்ண மாட்றாங்க... காய்கறி 'சந்தையை' இழுத்து மூடிய கலெக்டர்!