கொரோனாவால் உயிரிழப்பா?.. இழப்பீடு வழங்குவது தொடர்பாக... காரசார விவாதம்!.. கட் அண்ட் ரைட்டாக உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனாவுக்கு பலியானவர்களின் குடும்பங்களுக்கு நிதி இழப்பீடு வழங்குவ்து தொடர்பாக மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா அல்லது கொரோனாவுக்கு பிந்தைய பிரச்சனைகளால் உயிரிழப்போரின் குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்ற வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு, கொரோனாவால் பலியானவர்களின் குடும்பங்களுக்கு நிதி நிவாரணம் வழங்குவது கட்டாயம் என தெரிவித்தது.
விசாரணையின் போது நிவாரணம் தொடர்பான விதிகளை வகுப்பது, தங்களது அதிகாரத்திற்கு உடபட்டது அல்ல என்ற தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் பதிலை ஏற்காத நீதிபதிகள், பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி, கொரோனாவால் பலியானவர்களின் குடும்பத்திற்கு கருணைத் தொகை உள்ளிட்ட குறைந்தபட்ச நிவாரணத்தை வழங்குவது, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் பொறுப்பு என கூறினர்.
மேலும், நிவாரணம் என்பது சட்டப்பூர்வமாக வழங்கப்பட வேண்டிய ஒன்று என்றும், அது விருப்பு வெறுப்பை பொறுத்தது அல்ல என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். எவ்வளவு நிவாரணம் வழங்கலாம், அதற்கான சட்டதிட்டங்கள் என்ன என்பதை 6 வாரங்களுக்குள் முடிவு செய்யுமாறு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு அவர்கள் உத்தரவிட்டனர்.
அத்துடன், கொரோனாவுக்கு பலியானவர்களின் இறப்புச்சான்றிதழில் இறப்புக்கான காரணம், நாள் ஆகியவற்றை கட்டாயம் குறிப்பிடுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அந்த விவரங்கள் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு திருப்தி அளிக்கவில்லை என்றால் அவற்றை ஆய்வு செய்து மாற்றுவதற்கான வசதியையும் ஏற்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'வாக்சின் போட்டாச்சுன்னு ஒரு வார்த்தை சொல்லல...' வெறும் 15 நிமிஷத்துக்குள்ள மொத்தம் 'மூணு டோஸ்' போட்ட பெண்மணி...! - ஷாக் ஆன கணவர்...!
- இந்தியாவுக்கு வருகிறது 4வது தடுப்பூசி!.. முன்னேறிய நாடுகளின் முதல் சாய்ஸ் 'இது' தான்!.. அப்படி என்ன ஸ்பெஷல்?
- 'முதல் டோஸ் ஒரு ஊசி!.. அடுத்த டோஸ் வேறொரு நிறுவனத்தின் ஊசி'!.. வலுக்கும் ஆற்றல்!.. ஆய்வு முடிவில் வெளியான அதிர்ச்சி தகவல்!
- யாரெல்லாம் 'அந்த வாக்சின்' போட்டீங்களோ... அவங்களுக்கு 'கிரீன் பாஸ்' தர முடியாதுங்க...! - அனுமதி வழங்க மறுத்த ஐரோப்பிய ஒன்றியம்...!
- கொரோனா '3-வது அலை' எப்படிங்க இருக்க போகுது...? 'ரெண்டு தடுப்பூசி' மாத்தி போட்டுக்கலாமா...? - பதில் அளித்த எய்ம்ஸ் இயக்குனர்...!
- கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட விவரங்களை... பாஸ்போர்ட் உடன் இணைப்பது எப்படி?.. முழுமையான தகவல் உள்ளே
- தமிழகத்தில் ஜூலை 5ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!.. புதிய தளர்வுகள் அறிவிப்பு!.. எவை இயங்கும்?.. எவை இயங்காது?.. முழு விவரம் உள்ளே
- தமிழகத்தில் வேகமெடுக்கும் கருப்பு பூஞ்சை பாதிப்பு!.. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்ட மருத்துவ வல்லுநர் குழு!
- 'இந்தியா உட்பட 85 நாடுகள்'... 'இத கண்டுக்காம விட்டா பெரிய ஆபத்து'... உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
- 72 வயசு முதியவருக்கு... 10 மாசத்துல... 43 முறை கொரோனா பாசிட்டிவ்!.. என்ன நடக்குதுனே புரியாம திகைத்து நிற்கும் மருத்துவர்கள்!