'இந்தியர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்தா?... அதுக்கு எவ்வளவு செலவு ஆகும் தெரியுமா?'... சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சரமாரி கேள்வி!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கோவிட் தடுப்பு மருந்து விநியோகத்திற்காக அடுத்த ஒரு வருடத்தில் மத்திய அரசிடம் இருந்து 80,000 கோடி ரூபாய் கிடைக்குமா என்று கேள்வி எழுப்பியுள்ளார் புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் (Serum Institute of India) தலைமை நிர்வாக அதிகாரி ஆதர் பூனவல்லா (Adar Poonawalla).

உலகின் மிகப்பெரிய தடுப்பு மருந்து உற்பத்தி நிறுவனத்தை நடத்தி வரும் ஆதர் பூனவல்லா, 39 வயது இளைஞர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய கொரோனா வைரஸ் தடுப்பூசியை அவரது நிறுவனம் இந்தியாவில் தயாரித்து வருகிறது.

ட்விட்டரில் பதிவிட்ட அவர், "நான் இந்த கேள்வியைக் கேட்கிறேன், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள தடுப்பூசி உற்பத்தியாளர்கள் கொள்முதல் மற்றும் விநியோகத்தின் அடிப்படையில் நம் நாட்டின் தேவைகளை பூர்த்தி செய்ய திட்டமிட்டு செயல்பட வேண்டும். சுகாதார அமைச்சகம் தடுப்பு மருந்தை வாங்கி, இந்தியா முழுவதும் விநியோகம் செய்ய வேண்டும். இது தான் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு நம் முன் இருக்கும் மிகப்பெரிய சவால், அதை எப்படி சமாளிக்கப்போகிறோம் என்பது மிகவும் முக்கியமான விஷயம்"  என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும், "இந்த கேள்வியை நான் கேட்கிறேன், ஏனென்றால் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள தடுப்பூசி உற்பத்தியாளர்கள் கொள்முதல் மற்றும் விநியோகம் ஆகியவற்றின் அடிப்படையில் நம் நாட்டின் தேவைகளுக்கு சேவை செய்ய திட்டமிட்டு செயல்பட வேண்டும்."

சமீபத்தில் ஒரு நேர்காணலில், அவர் தடுப்பு மருந்து கிடைப்பது குறித்து தனது கருத்தை வெளிப்படுத்திய அவர், "யதார்த்தமாக பார்த்தால், முழு உலகிற்கும், இந்த கிரகத்தில் உள்ள அனைவருக்கும், அல்லது குறைந்தபட்சம் 90 சதவிகிதத்தினருக்கும் தடுப்பு மருந்து கிடைக்க குறைந்தது 2024ஆம் ஆண்டு ஆகிவிடும்" என்று தெரிவித்திருந்தார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்