சீக்ரெட் ப்ளான்... வேற லெவல் ஸ்கெட்ச்!.. கொரோனாவை கூண்டோடு காலி செய்ய களமிறங்கும் 'தபால் துறை'!.. 'இது'ல டைமிங் தான் ரொம்ப முக்கியம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்ட வாகனம் மூலம் நாடு முழுவதும் தடுப்பூசி சப்ளை பணியில் தபால்துறை களமிறங்குகிறது.

கொரோனா தடுப்பூசி இன்னும் முழுமையாக தயாரிக்கப்படவில்லை என்றாலும், அதை நாடு முழுவதும் கொண்டு செல்வதற்கான ஆயத்தப் பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அதற்கான உயர்மட்ட ஆலோசனை கூட்டங்கள் அடிக்கடி நடத்தப்படுகின்றன.

முன்களப் பணியாளர்கள், நோய் தொற்றில் பாதித்தோர், முதியோர் உள்ளிட்டோருக்கு முதற்கட்டமாக தடுப்பூசி வழங்கப்படுவதாக கூறப்பட்டாலும், அதனை நாடு முழுவதும் கொண்டு சேர்ப்பதற்காக மத்திய அரசு தபால் துறையுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. அதற்காக தபால் துறை தனது நெட்ஒர்க் வலையமைப்பை தடுப்பூசி விநியோக முறையை வரைபடமாக்கி வருகிறது.

இதுகுறித்து தபால் துறை வட்டாரங்கள் கூறுகையில், 'தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்ததும், அதனை நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் கொண்டு செல்ல தபால் துறை சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

                

தேவையான வெப்பநிலையில் தடுப்பூசியை பராமரித்து அதனை நாட்டின் தொலைதூர கிராம பகுதிகளுக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது. அதனால், எந்த வெப்பநிலையில் தடுப்பூசி கொண்டு செல்லப்பட வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்தல்கள் ஏதும் பெறப்படவில்லை. ஆனால் அதற்கான பணிகள் தொடங்கிவிட்டன.

இந்த பணியில், சுமார் 1,000 ஜி.பி.எஸ் கருவிகள் பொருத்தப்பட்ட ரயில்கள் உட்பட 1,500க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஈடுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையை பராமரிக்கும் முறையில் சுகாதாரத் துறை பெட்டிகளை வழங்கும். அதனை பாதுகாப்புடன் எடுத்து செல்வதில் கடந்த காலங்களில் தபால் துறை சாதனை செய்துள்ளது.

கடந்த காலங்களில், காசநோய் தொடர்பான மாதிரிகளை ஆய்வகங்களுக்கு அனுப்பும் பணியை தபால் துறை செய்துள்ளது. இதனுடன், அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மாதிரிகளை தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்புடன் சேர்ந்து இணைந்து வழங்கப்பட்டன.

தடுப்பூசி வெப்பநிலையை சீராக வைத்திருந்து ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக கொண்டு செல்ல முடியும். கொரோனா ஊரடங்கு காலத்தில் ​​தபால் ஊழியர்கள் பெரிய அளவிலான தொற்று தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களை (பிபிஇ) மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் நியமிக்கப்பட்ட சுகாதார மையங்களுக்கு வழங்கி உள்ளனர்' என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்