'பெண்கள் மாதவிடாய் காலத்தில் தடுப்பூசி போடலாமா'?... நிதி ஆயோக் விளக்கம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மாதவிடாய் காலத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா என்பது குறித்த குழப்பத்திற்கு நீதி ஆயோக் மருத்துவர் வி.கே.பால் விளக்கமளித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில், கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பூசிகள் குறித்து நிதி ஆயோக் மருத்துவர் வி.கே.பால் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது மாதவிடாய் காலத்தில் பெண்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்துப் பேசியவர், மாதவிடாய் காலங்களிலும் பெண்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். அதில் எந்த பிரச்சனையும் ஏற்பட வாய்ப்பில்லை. மாதவிடாயைக் காரணமாகக் கூறி தடுப்பூசி போட்டுக்கொள்வதைத் தள்ளிப்போட வேண்டிய அவசியமில்லை என்று விளக்கமளித்துள்ளார்.

இதனால் கடந்த சில நாட்களாகச் சமூகவலைத்தளங்களில் பரவி வந்த வதந்திக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்