‘உதவிக்கு ஒருத்தரும் வரல’.. கொரோனாவால் இறந்த ‘டாக்டர்’.. தனியாக தகனம் செய்த மகன்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனாவால் உயிரிழந்த தந்தைக்கு இறுதி சடங்கு செய்ய உதவிக்கு யாரும் வராத நிலையில் மகனே தனியாக உடலை அடக்க செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
Advertising

மும்பை கணேஷ் நகர் பகுதியில் வசிக்கும் மூத்த மருத்துவர் ஒருவருக்கு கடந்த சனிக்கிழமை கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இறந்த தந்தையின் உடலை எடுத்துச் செல்ல அமரர் ஊர்தி ஏற்பாடு செய்ய பல இடங்களில் பேசியுள்ளார். ஆனால் அவருக்கு எந்த வண்டியும் கிடைக்கவில்லை. இதனால் தந்தையின் சடலத்துடன் நீண்ட நேரம் காத்திருந்திருந்துள்ளார்.

இறுதியாக வண்டி ஒன்று கிடைக்க, அடுத்த சோதனை ஒன்று அவருக்கு காத்திருந்தது. தந்தையின் உடலை வண்டியில் ஏற்ற உதவி செய்ய ஒருவரும் வரவில்லை. பின்னர் தானே பாதுகாப்பு உடையணிந்து நண்பரின் உதவியுடன் தந்தையின் உடலை வண்டியில் ஏற்றி இடுகாட்டிற்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு சென்றால் அடுத்த கொடுமை காத்திருந்துள்ளது. உடலை தகனம் செய்ய ஒருவரும் வரவில்லை. பின்னர் மகனே அனைத்து வேலைகளையும் செய்து தனது தந்தையின் உடலை தகனம் செய்துள்ளார். கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரின் இறுதி சடங்கிற்கு உதவ முன்வராத மனிதாபிமானமில்லா செயல் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்