'ஊருக்கே போய்டலாம்'... மூட்டை, முடிச்சுகளோடு கிளம்பிய மக்கள்... 'சென்னை'யை விட வெகுவேகமாக காலியாகும் 'மெட்ரோ' நகரம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனாவால் மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்ல ஆரம்பித்து இருக்கின்றனர்.
கிராமப்புறங்களை விட நகரங்களில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை சென்னை, மும்பை, டெல்லி, ராஜஸ்தான், பெங்களூர் ஆகிய நகரங்களில் கொரோனா உச்சத்தில் உள்ளது. குறிப்பாக பெங்களூரில் தற்போது வெகுவேகமாக பரவி வருகிறது. இதனால் அங்கு ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் வேகமாக பரவும் கொரோனா காரணமாக மக்கள் பெங்களூரை காலி செய்து தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஆரம்பித்து இருக்கின்றனர். இதனால் நகரம் வேகமாக காலியாகி ஆரம்பித்து இருக்கிறது. ரெயில்கள், விமானங்கள் மற்றும் பிற வாகனங்கள் வழியாக இதுவரை சுமார் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் நகரத்தை காலி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
குறிப்பாக கடந்த 2 நாட்களாக மக்கள் வெளியேறும் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், ரெயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்கள் நிரம்பி வழிய ஆரம்பித்து உள்ளன. அதிலும் நாளொன்றுக்கு சுமார் 65,000 ஆயிரம் வாகனங்கள் நகரத்தை விட்டு வெளியேறுவதாக போக்குவரத்து போலீசார் தெரிவிக்கின்றனர். இதேபோல சென்னையில் கொரோனா அதிகரித்தபோது மக்கள் கூட்டம், கூட்டமாக சொந்த ஊர்களை நோக்கி சென்றது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கோவையில் கழிவுகளை அகற்ற இன்று முதல் ரோபோ!'.. அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிரடி!
- “இந்த பொண்ணு சொல்றது உண்மையா?”.. ‘தூங்கும்போது ஐ.டி கணவருக்கு வந்த போன் கால்!’.. தப்பை மறைக்க கணவர் செய்த கொடூரம்!.. மனைவி எடுத்த விபரீத முடிவு!
- 'கொலை வெறி'யோடு ஓடிவந்த காட்டு யானைக்கு முன்னால்... 'செல்பி' எடுத்த இளைஞர்... கடைசில என்ன ஆச்சுன்னு பாருங்க!
- பசங்க, பொண்டாட்டிய 'கொலை' பண்ணிட்டேன்... போன் போட்டு சொன்ன கணவர்... வீட்டுக்கு சென்று 'உறைந்து' போன உறவினர்கள்!
- 'வீழ்வேன் என்று நினைத்தாயோ'... மீண்டும் திறக்கப்பட்ட 'இருட்டுக்கடை' அல்வா... யார் ஸ்டார்ட் பண்ணிருக்காங்க பாருங்க!
- "'கேனான்', 'நிக்கான்'னு பசங்களுக்கு கேமரா பேரு வெச்சேன்"... இப்போ என்னோட பல வருஷ கனவையும் கட்டி முடிச்சுட்டேன்... லைக்குகளை அள்ளிக் குவிக்கும் "கேமரா இல்லம்"!!!
- கோவையில் ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனா!.. தென் மாவட்டங்களில் தீவிரமடையும் தொற்று!.. மாவட்ட வாரியாக முழு விவரம் உள்ளே
- தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது!.. இன்று மட்டும் 5 ஆயிரம் பேர் வீடு திரும்பினர்!.. முழு விவரம் உள்ளே
- “ஒரு மில்லியன் பேர் எடுத்த திடீர் முடிவு!”.. ஷாக் ஆன நாடு!.. 'இன்னும் என்னலாம் மாறப்போகுதோ!'.. எல்லா புகழும் கொரோனாவுக்கே!
- சீனா அருகே பரபரப்பு!.. 'புபோனிக் பிளேக்' நோய்க்கு 15 வயது சிறுவன் பலி!.. பதறவைக்கும் பின்னணி!