கொரோனாவால 'ஒருத்தரு' கூட இறக்கல... தென்னிந்தியாவிலேயே 'இந்த' மாநிலம் தான் செம கெத்து!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தென்னிந்திய மாநிலங்களை பொறுத்தவரை புதுச்சேரியில் இதுவரை ஒருவர் கூட கொரோனாவால் மரணமடையவில்லை.

கொரோனா பரிசோதனையைப் பொறுத்தவரையில் தமிழகமே முன்னிலையில் இருக்கிறது.தமிழகத்தில் இதுவரை 2,54,899 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது,8002 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 1,335 மாதிரிகள் முடிவுகளுக்காக காத்திருக்கின்றன.2,051 பேர் குணமடைந்துள்ளனர், 53 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அண்டை மாநிலங்களில் அடுத்த நிலையில் ஆந்திராவிலேயே அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் தமிழகத்தோடு ஒப்பிடும்போது 75% குறைவாகவே அங்கே பாதிப்பு இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தெலங்கானாவைத் தவிர கர்நாடகா, கேரளாவில் ஆயிரங்களுக்குள்தான் பாதிப்பு இருக்கிறது.

குணமடைந்தவர்களைப் பொறுத்தவரையில் சதவிகிதத்தின் அடிப்படையில் கேரளாவே முன்னிலையில் உள்ளது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட 519 பேரில் 492 பேர் குணமடைந்துவிட்டனர். கடந்த சில நாட்களில் நூற்றுக் கணக்கில் புதிய தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் குணமடைந்தோர் சதவிகிதத்தில் தமிழகம் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

கொரோனாவால் மரணமடைந்தவர்கள் தென்னிந்தியாவில் தமிழகத்தில்தான் அதிகம் என்றாலும் பாதிக்கப்பட்டவர்களில் இறந்தவர்களின் சதவிகிதத்தை வைத்துப் பார்க்கும்போது தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைவாகத்தான் இருக்கிறது. ஆந்திராவில் 1,81,144 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது, மே 12 ஆம் தேதி நிலவரப்படி, மாநிலத்தில் மொத்தம் 2,018 பாதிப்புகள்  உள்ளன அதில் 998 குணமாகி உள்ளனர் மற்றும் 45 இறப்புகள் பதிவாகி உள்ளன.

கேரளாவில் கொரோனா பரிசோதனையின் எண்ணிக்கை மிகக் குறைவு என்றாலும் அம்மாநிலம் கொரோனாவை கட்டுக்குள் வைத்திருக்கிறது.கேரளாவில் இதுவரை 37,858 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது, மாநிலத்தில் தற்போது 520 உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா பாதிப்புகள் உள்ளன, மற்றும் 4 இறப்புகள் பதிவாகி உள்ளன. கர்நாடகாவில்  1,11,595 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது, 862 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் 31 கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளன.

அதே நேரம் புதுச்சேரி மாநிலத்தில் 18 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அதில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்