அதிரடியாக 144 தடையுத்தரவை... மேலும் '3 மாதங்களுக்கு' நீட்டித்த மாநிலம்... என்ன காரணம்?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

144 தடையுத்தரவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பதாக சத்தீஸ்கர் மாநிலம் அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் வருகின்ற 31-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த 4-வது கட்ட ஊரடங்கில் கடைபிடிக்க வேண்டிய தளர்வுகளையும், அறிவுறுத்தல்களையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் மேலும் 3 மாதங்களுக்கு 144 தடையுத்தரவை நீட்டிப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மாநில உள்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால் மாநிலம் முழுவதிலும், பொது இடங்களில் 4 பேருக்கு மேல் கூடுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. மே 31-ம் தேதி வரை ரெஸ்டாரன்டுகள், ஓட்டல் பார்கள், கிளப்புகள் மூடப்படும். விளையாட்டு வளாகங்கள், ஸ்டேடியங்களும் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டிருக்கும்,'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 92 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், 59 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்