லேசான 'கொரோனா' அறிகுறி இருந்தா... வீட்டுல இருந்து இதை 'மட்டும்' செய்ங்க... மறுபடியும் 'பரிசோதனை' தேவையில்லை!
முகப்பு > செய்திகள் > இந்தியாலேசான கொரோனா அறிகுறிகளுடன் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர் களுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. அதில் தனிமை காலம் முடிந்த பிறகு அவர்களுக்கு பரிசோதனை நடத்த தேவையில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.
அதில் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து இருப்பதாவது:-
*கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உரிய நேரத்தில் சிகிச்சை பெறுவது முக்கியம். அப்படி பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற பொதுமக்கள் உதவ வேண்டும். அவர்களை மறைத்து வைப்பது அவர்களுடைய குடும்பத்துக்கு மட்டுமின்றி, மற்றவர்களுக்கும் ஆபத்தாகும்.
*லேசான கொரோனா அறிகுறிகள் மற்றும் தொடக்கநிலை அறிகுறி இருப்பவர்கள், அறிகுறி தென்பட்ட நாளில் இருந்து 17 நாட்களுக்குள், வீட்டில் தங்கள் தனிமைப்படுத்துதலை முடித்துக் கொள்ளலாம்.
*அதுபோல், தொடர்ந்து 10 நாட்களாக காய்ச்சல் இல்லாதவர்களும் தங்கள் தனிமைப்படுத்துதலை முடித்துக் கொள்ளலாம். அத்தகையவர்களுக்கு தனிமை காலம் முடிந்த பிறகு கொரோனா பரிசோதனை நடத்த தேவையில்லை.
*அவர்களை 24 மணி நேரமும் கவனித்துக் கொள்ள ஒரு உதவியாளர் இருக்க வேண்டும். வீடுகளில் போதிய மருத்துவ வசதிகள் இருக்க வேண்டும்.
*அதுபோல், ஆஸ்பத்திரிகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்வது தொடர்பான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
*அதன்படி, கொரோனா நோயாளிகள், லேசான, மிதமான, தீவிர என்று 3 பிரிவுகளாக வகைப்படுத்தப் படுவார்கள். லேசான அறிகுறி இருப்பவர்கள், அவர்களது மருத்துவ நிலவரத்தை பொறுத்து, பரிசோதனை நடத்தப்படாமலே வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள்.
*இந்தியாவில், கொரோனாவுக்கு குணமடைபவர்கள் விகிதம் 31.15 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இதெல்லாம் எப்ப தான் முடியும்!? வெளியான ஆய்வு முடிவுகள்!.. ஆராய்ச்சியாளர்கள் பரபரப்பு தகவல்!
- ரயிலில் வந்த தொழிலாளர்கள்!.. தனிமை முகாமுக்கு பயந்து எடுத்த அதிரடி முடிவு... மாநில அரசுக்கு புதிய சிக்கல்!
- 'எல்லாம் உங்க கைல தான் இருக்கு '... 'இத மட்டும் செய்யல, இந்தியாவில் பலருக்கு வேலை பறிபோகும்'... FICCI எச்சரிக்கை!
- தமிழகத்தில் அசுரவதம் செய்யும் கொரோனா!.. இன்று ஒரே நாளில் 6 பேர் பலி!.. 8 ஆயிரத்தைக் கடந்தது தொற்று எண்ணிக்கை!
- செல்வச் செழிப்பில் மிதந்த... கோடீஸ்வர நாட்டுக்கு இப்படியொரு நிலையா!? அதலபாதாளத்தில் விழுந்த பொருளாதாரம்!.. அடிப்படை வரியே 3 மடங்கு உயர்வு!
- 'புருஷன் வருவாருன்னு காத்துக்கிடந்த மனைவி'... 'சவப்பெட்டியில் வந்த கணவன்'... நெஞ்சை ரணமாக்கும் சோகம்!
- 'கொரோனா ஒரு மனநோய்...' 'விளையாட்டுதான் வைரசுக்கு எதிரான சிறந்த மருந்து...' 'அதிபரின்' பேச்சால் 'அதிர்ந்து' போயிருக்கும் 'மக்கள்'...
- மதுபானங்களை "ஹோம் டெலிவரி" செய்யத் தயாராகும் மாநிலங்கள்!.. வெளியான பரபரப்பு தகவல்!.. தமிழகத்தின் நிலை என்ன?
- ஆப்பிரிக்காவின் 'ஆர்கானிக்' மூலிகைப் பானம்... 'கொரோனாவை குணப்படுத்துகிறதா?...' 'வரலாற்றை மாற்றி எழுதுமா என ஆய்வு?...'
- "இதுக்கெல்லாம் சீனாகிட்ட போகணுமா?".. "ஒரே மாசத்துல கண்டுபுடுச்சுட்டோம்!".. இந்திய மருத்துவர்கள் சாதனை!