'அதிகரிக்கும் கொரோனா'... 'இன்று முதல் 15 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு'... அதிரடியாக அறிவித்த மாநிலம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉலக அளவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், இந்தியாவைப் பொறுத்தவரை மகாராஷ்டிரா மாநிலம் தான் கொரோனா பரவலில் டாப் லிஸ்ட்டில் இருந்தது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இங்கிலாந்து நாட்டில் புதிதாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக மேலும் அச்சம் எழுந்துள்ளது.
கொரோனா வைரஸின் புதியவகை வடிவம் குறித்து விவாதிக்க மத்திய சுகாதார அமைச்சகத்தின் சார்பில் உருவாக்கப்பட்ட கூட்டு கண்காணிப்புக் குழுவின் அவசரக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பின் பேசிய மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன், புதிய கொரோனா வைரஸ் குறித்து அரசு முழுமையான எச்சரிக்கையுடன் இருப்பதாகவும், மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டார்.
மேலும் தமிழகத்தைப் பொறுத்தவரை வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வரும் அனைத்து பயணிகளையும் இன்று முதல் 31-ஆம் தேதி வரை 7 நாட்கள் தனிமைப்படுத்த உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதனிடையே மகாராஷ்டிரா மாநிலத்திலும் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக இன்று முதல் ஜனவரி 5ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து மகாராஷ்டிரா வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தமிழகத்தின் இன்றைய (21-12-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரங்கள் உள்ளே...!
- இவங்களாலாம் எப்படி மறக்க முடியும்...! எல்லாரும் இப்போ எப்படி இருக்காங்க...? - ஊரடங்கில் துயரப்பட்டவர்களின் தற்போதைய நிலை...!
- 'நல்லா போய்ட்டு இருந்துது'... 'திடீரென அதிகரித்த கொரோனாவால்'... 'பிரபல நிறுவனம் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை?!!'... 'கவலையில் ஊழியர்கள்!!!...
- 'இங்கிலாந்தில் வேகமாக பரவும் புதிய வகை கொரோனா'... மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!
- மறுபடியும் மொதல்ல இருந்தா?... தீவிர லாக்டவுன்-ஐ அமல்படுத்திய நாடு... அவசர அவசரமாக ஆலோசனை நடத்தும் இந்தியா!!
- ஆவலோடு காத்திருக்கும் மக்கள்.. கொரோனா ‘தடுப்பூசி’ எப்போது பயன்பாட்டுக்கு வரும்..? மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் முக்கிய தகவல்..!
- தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்!.. தற்போது எத்தனை பேர் சிகிக்சை பெறுகிறார்கள்?.. சென்னையின் நிலை என்ன?.. முழு விவரம் உள்ளே
- 'தண்ணீரில் மிதந்து கொண்டே திரைப்படம்'... கொரோனாவால் இழந்த சினிமா அனுபவத்தை அதைவிட ரெண்டு மடங்காக பெறும் ‘கொடுத்து வெச்ச’ ரசிகர்கள்!
- 'கொரோனா தடுப்பூசி போட்டதும்'... 'நேரலையில் மயங்கி விழுந்த செவிலியர்!'.. உண்மையில் நடந்தது என்ன? நிபுணர்களின் மருத்துவ விளக்கம்!
- ‘மாறுபாடு அடைந்து வேகமாக பரவும்’... ‘புதிய வகை கொரோனா வைரஸ்’... ‘மீண்டும் லாக் டவுனை நோக்கி சென்ற நகரம்’... 'கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிப்பு’...!!!