ஊரடங்கால் கிடைத்த மிகப்பெரிய 'நற்பலன்'... இப்டியே போனா 'கொரோனா'வை... நாட்டை விட்டே 'வெரட்டி' விட்றலாம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவிவரும் அதே நேரத்தில் ஊரடங்கால் உண்மையிலேயே நாட்டிற்கு மிகப்பெரிய பலன் கிடைத்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் வருகின்ற மே மாதம் 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. வல்லரசு நாடுகள் பலவும் கொரோனாவுக்கு எதிராக திணறிவரும் நிலையில் இந்தியா சிறப்பாக கொரோனா பரவலை எதிர்கொண்டு அதனை கட்டுக்குள் கொண்டுவர தேவையான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.

கொரோனா பரவல் அதிகமாக இருந்தாலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவும் உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இந்திய மாநிலங்கள் முழுமையாக மீண்டு வருகின்றன. மறுபுறம் தமிழகத்திலும் நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்கள் கொரோனா பாதிப்பில் இருந்து முற்றிலும் மீண்டுள்ளன.

இந்த நிலையில் மேலும் ஒரு நற்பலனாக அதிகம் பாதிக்கப்பட்ட சிவப்பு மண்டலங்களை சேர்ந்த மாவட்டங்கள்  ஆரஞ்ச் மண்டலங்களாக மாறியுள்ளன. ஏப்ரல் 15-ம் தேதி 170 மாவட்டங்கள் சிவப்பு மண்டலப் பட்டியலில் இருந்தன. தற்போது இந்த எண்ணிக்கை 129 ஆக குறைந்துள்ளது. ஏப்ரல் 15-ம் தேதி ஆரஞ்ச் மண்டலத்தில் 207  மாவட்டங்கள் இருந்த நிலையில் இப்போது அது 297 மாவட்டங்களாக உயர்ந்துள்ளது.

*14 நாட்களாகப் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டங்கள் ஆரஞ்ச் மண்டலமாகும். 28 நாட்களாகப் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டங்கள் பசுமை மண்டலமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்