'இறுதிகட்ட பரிசோதனையில் இருக்கும்...' கோவாக்சின் தடுப்பூசி இந்தியாவில் எப்போது அறிமுகம்...? - பாரத் பயோடெக் நிறுவனம் தகவல்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாபாரத் பயோடெக் நிறுவனம் வரும் கொரோனா வைரஸிற்கான தடுப்பு மருந்து வரும் 2021-ம் ஆண்டின் ஜூன் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதல் உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸிற்கு இதுநாள் வரை ஒரு முழு நிவாரணமாக தடுப்பு மருந்து வெளிவந்தபாடில்லை. இந்தியா உட்பட பல்வேறு உலக நாடுகளும் பல மருந்து நிறுவனங்களும் அயராது கொரோனா தடுப்பி மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவில் 3 தடுப்பூசிகள் இறுதிக்கட்ட பரிசோதனை அளவில் ஈடுபட்டு வருகின்றன. அதில், ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் (ஐசிஎம்ஆர்) சேர்ந்து 'கோவாக்சின்' என்ற தடுப்பூசி, 2-வது கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ளது. 3வது கட்ட பரிசோதனை நடத்துவதற்கு அனுமதி கேட்டு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்புக்கு (டிசிஜிஐ) பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பம் செய்திருந்தது. இதற்கு டிசிஜிஐ-யும் ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் தற்போது இந்த கோவாக்சின் தடுப்பு மருந்து 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்படும் என்று பாரத் பயோடெக் சர்வதேச நிறுவனத்தின் செயல் இயக்குநர் சாய் பிரசாத் தெரிவித்துள்ளார். அதன்படி கோவாக்சின் தடுப்பு மருந்தின் மீதான 3-ம் கட்ட பரிசோதனைக்கு மத்திய அரசும் அனுமதி அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த பரிசோதனையானது 14 மாநிலங்களில் சுமார் 25 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு நடத்தபடவுள்ளது. இதன்காரணமாக வரும் 2021-ம் ஆண்டு 2ம் காலாண்டில் பரிசோதனை முடிவுகள் தெரிய வரும். ஜூன் மாதம் கோவாக்சின் தடுப்பு மருந்து அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது என பாரத் பயோடெக் சர்வதேச நிறுவனத்தின் செயல் இயக்குநர் சாய் பிரசாத் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தமிழகத்தின் இன்றைய (24-10-2020) கொரோனா அப்டேட்'... 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்'... 'முழு விவரங்கள் உள்ளே!'...
- 'மக்களிடம் எழுந்துள்ள கேள்விகள்'...'எதற்கெல்லாம் அனுமதி'?... 'என்னென்ன தளர்வுகள்'... 28ந்தேதி முதலமைச்சர் ஆலோசனை!
- 'இத கேட்கும் போதே மனசு பதறுதே'... 'பறிபோன வேலை'... 'பிள்ளைகளுக்கும் இத தான் சாப்பிட கொடுக்கிறோம்'... அதிரவைக்கும் தகவல்!
- 'தமிழகத்தின் இன்றைய (23-10-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்...? - முழு விவரங்கள்...!
- 'எங்கள நிம்மதியா இருக்க விடமாட்டீங்களா'?... 'சீனாவிலிருந்து வீசிய 'மஞ்சள் தூசி'... தலைதெறிக்க வட கொரியா எடுத்த நடவடிக்கை!
- தென் கொரியாவில் பரபரப்பு!.. தடுப்பூசி போடப்பட்ட 25 பேர் மரணம்!.. அடுத்தடுத்த திருப்பங்களால்... மருத்துவர்கள் 'அதிரடி' அறிவிப்பு!
- 'கொரோனா சிகிச்சையில்'... 'அங்கீகரிக்கப்பட்ட முதல் மருந்து!!!'... 'முழு அனுமதி வழங்கிய FDA!'...
- “இந்தியாவிலும் தன்னார்வலர்கள் மீது தடுப்பூசி செலுத்தி பரிசோதனை!”.. எத்தனை பேருக்கு?.. ‘எந்த’ நாட்டு தடுப்பூசி? முழு விபரம்!
- “இவர்களைத் தவிர” மற்ற வெளிநாட்டவர் இந்தியா வரத் தொடங்கலாம் - மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!
- 'திடீர் கட்டுப்பாடுகளால் H-1B விசா விவகாரத்தில்'... 'பெரும் சிக்கலில் இந்தியர்கள்!!!'... ' IT நிறுவனங்களுக்கு வைக்கப்பட்டுள்ள செக்!'...