'போட்றா வெடிய'!.. கோவாக்சின் போட்டவர்களுக்கு உலக அளவில் கிடைக்கப் போகும் அங்கீகாரம்!.. இன்ப அதிர்ச்சி கொடுத்த WHO!
முகப்பு > செய்திகள் > இந்தியாபாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
உலகின் அனைத்து நாடுகளுக்கும் இப்போது மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருப்பது டெல்டா வகை கொரோனா வைரஸ். டெல்டா கொரோனா பாதிப்பில் இருந்து தப்ப அனைத்து நாடுகளும் பெரும் முயற்சி எடுத்து வருகின்றன.
தற்போதைய சூழலில் வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி மட்டுமே ஒரே தீர்வாகப் பார்க்கப்படுகிறது. அனைத்து நாடுகளும் வேக்சின் போடும் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. உலகின் பல்வேறு நாடுகளும் வேக்சின் போட்ட வெளிநாட்டினரை தங்கள் நாடுகளில் அனுமதிக்கத் தொடங்கிவிட்டனர்.
இந்தியாவில் இப்போது கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி, மாடர்னா, ஜான்சன் அன்ட் ஜான்சன் என ஐந்து வேக்சின்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும், கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ள கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே இதுவரை இந்தியாவில் இருந்து தயாரிக்கப்பட்ட ஒரே கொரோனா வேக்சினாக உள்ளது.
தற்போது வரை கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்கவில்லை. இதனால் கோவாக்சின் எடுத்துக் கொண்ட இந்தியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் உலக சுகாதார அமைப்பின் ஒப்புதல் பெற பாரத் பயோடெக் நிறுவனம் தொடர்ந்து முயன்று வருகிறது. இந்தச் சூழலில் கோவாக்சின் தடுப்பூசி சிறப்பாக இருந்ததாகாவும், வரும் செப்டம்பர் மாதம் கோவாக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து உலக சுகாதார அமைப்பு முடிவெடுக்கும் என அந்த அமைப்பின் வேக்சின் பிரிவு உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்துள்ள கோவாக்சின் 78% வரை பலன் அளிப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் 2ம் அலையில் மோசமான பாதிப்பை ஏற்படுத்திய டெல்டா கொரோனாவுக்கு எதிராகவும் கோவாக்சின் நல்ல பலன் அளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வந்த Sputnik-V'.. டெல்டா கொரோனாவவை வீழ்த்துமா?.. திடீரென ஏகிறிய டிமாண்ட்!.. பின்னணி என்ன?
- 'குறையும் இரண்டாம் அலையின் தாக்கம்'... 'ஆனா 4 மாவட்டங்களில் அதிகரிக்கும் தொற்று'... 'காரணம் என்ன'?... ராதாகிருஷ்ணன் விளக்கம்!
- 'கோவாக்சின், கோவிஷீல்டு' முதல் டோஸ் போட்டவர்களுக்கு அடித்தது யோகம்!.. பிறந்தது புதிய நம்பிக்கை!.. பச்சை கொடி காட்டிய DCGI!
- இனி மது வாங்க வருபவர்களுக்கும் கொரோனா ‘நெகட்டிவ்’ சான்றிதழ் கட்டாயம்.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட மாநிலம்..!
- மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பும் உலக நாடுகள்.. ஆனா இந்த நாட்டுல மட்டும் எல்லாம் ‘தலைகீழாக’ போய்ட்டு இருக்கு.. மீண்டும் ‘பயமுறுத்தும்’ எண்ணிக்கை..!
- இந்த 'வாக்சின்' போடுற விதமே 'வித்தியாசமா' இருக்கு...! 'மொத்தம் மூணு டோஸ்...' - அடுத்து அறிமுகமாக உள்ள 'புதிய' வாக்சின் குறித்து வெளியாகியுள்ள 'பரபரப்பு' தகவல்...!
- தடுப்பூசில இப்படி ஒரு ட்விஸ்டா?.. கோவாக்சின் & கோவிஷீல்டு போட்டவர்களுக்கு... 2வது டோஸில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!
- ‘அவங்க நமக்கு கடவுள் மாதிரி’.. கொரோனா வார்டில் நடந்த அத்துமீறல்.. தர்ம அடி கொடுத்த மக்கள்..!
- 'தடுப்பூசி போடுறீங்களா இல்ல'... 'அடுக்கடுக்காக காத்திருக்கும் நடவடிக்கைகள்'... பாகிஸ்தான் அரசு அதிரடி!
- 'ஊரடங்கில் தளர்வா இல்லை கட்டுப்பாடா'?... 'மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை'... முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு!