‘சகோதரிகள் செய்த காரியத்தால்..’ அதிர்ச்சியில் உறைந்துபோன குடும்பத்தினர்..
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தரப்பிரதேசத்தில் சகோதரி முறைகொண்ட இரண்டு பெண்கள் திருமணம் செய்துகொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் ரொஹான்யா பகுதியைச் சேர்ந்த சகோதரி முறைகொண்ட இரண்டு பெண்கள் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். அவர்களுடைய இந்த முடிவைக் கேட்டு அதிர்ந்த குடும்பத்தினர் இதைக் கடுமையாக எதிர்த்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து சிவன் கோயிலுக்கு வந்த அந்தப் பெண்கள் அங்கிருந்த புரோகிதரிடம் திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளனர். அதைக் கேட்ட அவர் என்ன செய்வதெனத் தெரியாமல் திருமணம் செய்துவைக்க மறுத்துள்ளார். ஆனால் அங்கேயே அமர்ந்த பெண்கள் திருமணம் கொண்ட பிறகே கோயிலை விட்டுக் கிளம்பியுள்ளனர்.
இந்தச் செய்தி அப்பகுதியில் பரவக் கோயிலில் கூட்டம் கூடியுள்ளது. ஆனால் அதற்கு முன்பே அங்கிருந்து சென்றுவிட்ட பெண்கள் சமூக வலைத்தளத்தில் தங்களுடைய திருமணப் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். சகோதரி முறைகொண்ட இரண்டு பெண்கள் திருமணம் செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இதுவே வாரணாசியில் நடைபெறும் முதல் தன்பாலின திருமணம் எனவும் கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இப்படி எல்லாம் கூடவா பண்ணுவாங்க..?’ அரசு மருத்துவமனையில் நடந்த அவலம்..
- புகைப்பிடிப்பவர்களே.. 'இனிமேலாச்சும்'.. 'இப்படி செய்யாம இருங்க'... நெஞ்சை உருக்கும் புகைப்படம்!
- இறந்ததாக அறிவித்த டாக்டர்கள்.. ‘புதைக்கும் முன் நடந்த அதிசயம்..’
- ‘உயிருடன் இருந்தவரை இறந்ததாகக் கூறிய டாக்டர்..’ பிரேதப் பரிசோதனையின்போது தெரியவந்த பரிதாபம்..
- ‘தாயின் செயலால் அதிர்ந்துபோய் நின்ற மகள்..’ கண்முன்னே தந்தைக்கு நடந்த பயங்கரம்..
- ‘வயிற்றிலிருந்த பொருட்களைப் பார்த்து அதிர்ந்த டாக்டர்கள்..’ மனநலம் பாதித்தவருக்கு நடந்த பரிதாபம்..
- 'நாற்காலியில் அமர்ந்து சாப்பிட்டதற்காக'.. பட்டியலின இளைஞருக்கு நேர்ந்த சோகம்!