காதலர் தினத்தை கொண்டாட கோவா சென்ற காதலர்கள்.. சோகத்தில் முடிந்த காதல் பயணம்.. கலங்கிப்போன குடும்பத்தினர்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கோவாவில் காதலர் தினத்தை கொண்டாட சென்ற காதலர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertising
>
Advertising

                             Images are subject to © copyright to their respective owners.

Also Read | நம்ம மதுரைக்காரரு.. கானா நாட்டில் கிடைத்த பதவி.. ஆப்பிரிக்காவை கலக்கும் தமிழன்..!

ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 14-ம் தேதி காதலர்கள் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகையான கதைகளும் இருக்கின்றன. ஆனால் பொதுவாக அன்றைய தினத்தில் காதலர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று முன்தினம் காதலர் தினம் உலகம் முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டது. காதலர் தினத்தில் தங்களது இணையரோடு சுற்றுலா செல்லவும், புதிய இடங்களுக்கு பயணிக்கவும் பலரும் விருப்படுவது உண்டு. அப்படித்தான் நினைத்திருக்கின்றனர் விபு சர்மாவும், சுப்ரியா துபேவும். ஆனால் துரதிருஷ்டவசமாக அதுவே அவர்களது கடைசி பயணமாக அமைந்துவிட்டது.

Images are subject to © copyright to their respective owners.

டெல்லியில் உள்ள நிறுவனம் ஒன்றில் விபு சர்மா பணிபுரிந்து வந்திருக்கிறார். சுப்பிரியா பெங்களூருவில் வேலைபார்த்து வந்திருக்கின்றார். இருவரும் காதலித்து வந்த நிலையில் காதலர் தினத்தை கொண்டாட கோவாவிற்கு சென்றிருக்கின்றனர் இருவரும். அங்கே தங்கி பல இடங்களை சுற்றிப்பார்த்த இருவரும் தெற்கு கோவாவின் கனகோனா தாலுகாவில் உள்ள பாலோலம் கடற்கரையில் திங்கள்கிழமை இரவு உணவுக்குப் பிறகு நீராடுவதற்காக சென்றிருக்கின்றனர்.

அப்போது, எதிர்பாராதவிதமாக கடலலையில் சுப்பிரியா அடித்துச் செல்லப்பட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த விபு ஷர்மா சுப்பிரியாவை காப்பாற்ற முயன்றிருக்கிறார். அப்போது, அவரும் கடலலையில் சிக்கியதாக போலீசாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை காலை 7 மணியளவில் ஊரேம் என்ற இடத்தில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும் பின்னர் மதியம் அந்த இடத்திலிருந்து சிறிது தூரத்தில் விபு ஷர்மாவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் கனகோனா காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Images are subject to © copyright to their respective owners.

இறந்தவர்களின் போன் மற்றும் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல் மூலமாக இருவரது முகவரியும் கண்டறியப்பட்டிருக்கிறது. இதனையடுத்து இருவரது பெற்றோருக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. காதலர் தினத்தை கொண்டாட கோவாவிற்கு சென்ற இளம் காதலர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழத்தியுள்ளது.

Also Read | "சாப்பாடு தரமா இருக்கணும்".. அரசு பள்ளிக்கு திடீர் விசிட் அடித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!

COUPLE, GOA, VALENTINE DAY CELEBRATION, SEA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்