'லண்டன் வேலையை உதறிய தம்பதி'... 'ச்சேன்னு 4 விதமா பேசிய 4 பேர்'... இப்போ வருமானத்தை பார்த்து ஆடிப்போன அதே 4 பேர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

லண்டன் வேலையை உதறி விட்டு இந்தியா வந்த தம்பதி செய்து வரும் வேலையில் வருமானம் கொட்டி வருகிறது.

இந்தியாவைச் சேர்ந்த தம்பதி ராம்தே மற்றும் பாரதி. இவர்கள் இருவரும் கடந்த 2006ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை இங்கிலாந்தில் வேலை செய்து வந்துள்ளார்கள். அப்போது இந்தியாவில் ராம்தேவின் வயதான பெற்றோர் வசித்து வந்துள்ளார்கள். அவர்களுக்கு அவ்வப்போது உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் பெற்றோரின் உடல்நிலை குறித்துக் கவலைப்பட்ட ராம்தேவ் மற்றும் அவரது மனைவி பாரதி ஆகிய இருவரும் தங்கள் குழந்தைகளுடன் சொந்த ஊருக்கே திரும்பி விட முடிவு செய்து இந்தியா வந்து சேர்ந்தார்கள்.

சொந்த ஊருக்கு வந்து பெற்றோரை இருவரும் கவனித்து வந்த நிலையில், இங்கு என்ன வேலை செய்யலாம் என இருவரும் யோசித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது தான் அவர்களுக்கு ஒரு யோசனை தோன்றியது. அதாவது, எருமை, கோழி, வாத்து போன்றவற்றை வளர்ப்பதோடு விவசாயமும் செய்யலாம் என முடிவு செய்தார்கள்.

அப்போது புதிதாக நாம் ஏதாவது செய்ய நினைத்தாலும், ஊரில் 4 பேர் நான்கு விதமாகப் பேசத் தயாராக இருப்பார்கள் என்ற கூற்றிற்கு இணங்க, லண்டனில் வசித்து வந்த இவர்கள் எப்படி இதைச் செய்து வருமானம் ஈட்டப் போகிறார்கள் எனப் பேசியுள்ளார்கள். ஆனாலும் ராம்தே மற்றும் பாரதி தம்பதி தங்களின் முயற்சியைக் கைவிடாமல் தங்களின் திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கினார்கள்.

அதோடு அவர்கள் செய்யும் ஒவ்வொரு வேலையையும் வீடியோவாக எடுத்து, யூ டியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்துப் பதிவிடத் தொடங்கினார்கள். நாட்கள் செல்ல செல்ல ராம்தே மற்றும் பாரதி தம்பதியர் செய்யும் வேலை மற்றும் அவர்கள் பதிவிடும் வீடியோவிற்கு வரவேற்பு அதிகமானது. வீடியோவிற்கு பார்வையாளர்கள் அதிகமாகி, அவர்களின் வீடியோவிற்கு லைக்குகள் குவியத் தொடங்கியது.

முதலில் தம்பதியரைப் பார்த்து எப்படி 4 பேர் கிண்டல் அடித்தார்களா, தற்போது அவர்களே வாயடைத்து நிற்கிறார்கள். காரணம் தம்பதியர் மாதம்தோறும் ஈட்டும் வருமானம் தான் காரணம். தற்போது அவர்களுக்கு மாத வருமானமாக 5 லட்சம் வரை ஈட்டுகிறார்கள். இதுகுறித்து பேசிய ராம்தே மற்றும் பாரதி தம்பதியர், ''லண்டனில் நாங்கள் வேலை செய்து வந்தாலும் கிராமத்து வாழ்க்கை எங்களுக்குப் பிடித்துள்ளது. எங்களின் முக்கிய நோக்கம் விவசாயம் மட்டுமே.

ஆனால் வீடியோ எடுத்து அதைப் பதிவேற்றியது எல்லாம் விளையாட்டாக ஆரம்பித்தது. அது இவ்வளவு மக்களிடம் சென்று சேரும் எனக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. எங்களுக்குப் பணம் முக்கியம் அல்ல. கிராம வாழ்க்கை எவ்வளவு அழகானது, தற்போதைய சூழலில் அது எவ்வளவு முக்கியம் என மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே. அதை மகிழ்ச்சியோடு செய்து வருகிறோம்'' என மனநிறைவுடன் கூறினார்கள், ராம்தே மற்றும் பாரதி தம்பதியர்.

மற்ற செய்திகள்