'கர்ப்பமடைந்த' மகள்... அந்த பையனோட 'கொழந்த' எங்க பொண்ணு 'வயத்துல' வளருறதா?... 'பெற்றோர்களால்' பெண்ணுக்கு நேர்ந்த 'கொடூரம்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தெலுங்கானா மாநிலம் ஜொகுலம்பா காட்வேல் மாவட்டத்திலுள்ள சாந்திநகர் கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் பாஸ்கர் ஷெட்டி மற்றும் வீரம்மா. இந்த தம்பதியருக்கு 20 வயதில் மகள் ஒருவர் உள்ளார்.

'கர்ப்பமடைந்த' மகள்... அந்த பையனோட 'கொழந்த' எங்க பொண்ணு 'வயத்துல' வளருறதா?... 'பெற்றோர்களால்' பெண்ணுக்கு நேர்ந்த 'கொடூரம்'!
Advertising
Advertising

அந்த இளம்பெண் ஆந்திர மாநிலம் குர்னூல் மாவட்டத்தில் மூன்றாமாண்டு கல்லூரி படிப்பை படித்து வந்தார். ஊரடங்கின் காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியில் தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு அந்த பெண்ணை பெற்றோர்கள் மருத்துவமனை அழைத்து சென்று பரிசோதனை நடத்தினர்.

அப்போது அந்த பெண் கர்ப்பமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, இதுகுறித்து அந்த பெண்ணிடம் பெற்றோர்கள் விசாரித்ததில் கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவருடம் பழக்கம் ஏற்பட்டதாக தெரிவித்தார். மேலும், அந்த மாணவர் மாற்று சமூகத்தை சேர்ந்தவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தங்களை விட தாழ்ந்த சமுதாயத்தை சேர்ந்த மாணவர் என்பதால் மேலும் கோபமடைந்த பெண்ணின் பெற்றோர்கள், உடனே கருவை கலைத்து விடுமாறு எச்சரித்துள்ளனர்.

ஆனால், கருவை கலைக்க அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, பெண்ணை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு திரும்பிய நிலையில், அந்த பெண்ணை பாஸ்கர் மற்றும் வீரம்மா ஆகியோர் அடித்து துன்புறுத்தியுள்ளதாக தெரிகிறது. பின்னர் மறுநாள் காலை, வீட்டின் அறையில் தூங்கிக் கொண்டிருந்த மகளை பெற்றோர்கள் சேர்ந்து பெண்ணின் முகத்தில் தலையணை வைத்து கொலை செய்துள்ளனர். இதனை தொடர்ந்து, தனது மகள் மாரடைப்பால் உயிரிழந்ததாக அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தனர்.

இதுகுறித்து, அப்பகுதியில் சிலருக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், மூச்சடைத்து இளம்பெண் உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பெற்றோர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், தங்களது மகளை கொலை செய்ததை இருவரும் ஒப்புக் கொண்டனர்.

பின்னர் பாஸ்கர் மற்றும் வீரம்மா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரால் மகள் கர்ப்பமடைந்த காரணத்தால் சொந்த மகளையே பெற்றோர்கள் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்