கொரோனாவில் இருந்து குணமாகிய பின், மீண்டும் 69 வயது இத்தாலியருக்கு நேர்ந்த சோகம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உலகம் முழுவதும் கொரோனாவுக்கு 2 லட்சத்து 42 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  9, ஆயிரத்து 881 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவைப் பொருத்தவரை கொரோனா தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பொது இடங்களில் ஒன்றாக கூடுவதை தவிர்க்கவும் அரசால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இது தவிர கொரோனாவை ஒழிப்பதற்கான தடுப்பு முறையின் முதல் அம்சமாக, மார்ச் 22-ஆம் தேதி நாடு தழுவிய தேசிய ஊரடங்கு உத்தரவும் அமலுக்கு வருகிறது.

இந்த நிலையில், இதுவரை கொரோனாவால் இந்தியாவில் கர்நாடகா, டெல்லி, மஹாராஷ்டிரா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 4வது நபர் பஞ்சாபில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 72 வயது நபராவார். இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இத்தாலியைச் சேர்ந்த 69 வயதான ஆண்ட்ரி கார்லி ( Andri Carly) என்கிற நபருக்கு கொரோனாவால் முதலில் பாதிக்கப்பட்டு குணமானார். 

பின்னர் அவர் வேறு ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். கொரோனாவில் இருந்து குணமாக்கப்பட்ட நிலையில், மீண்டும் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

CORONAVIRUSOUTBREAKINDIA, CORONAINDIA, CORONAVIRUSININDIA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்