'10 நாள்ல என் பொண்ணுக்கு கல்யாணம்'... 'கதறி துடிக்கும் பெற்றோர்'... 'ஐடி' ஊழியர் வெளியிட்ட வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

14ம் தேதி திருமணம் நடைபெற இருக்கும் நிலையில், சீனாவில் சாப்ட்வேர் என்ஜினீயர் ஒருவர் சிக்கியுள்ள சம்பவம் அவரது பெற்றோரை பதற்றம் அடைய செய்துள்ளது.

ஆந்திராவின் கர்னூல் நகரை சேர்ந்தவர் அநேம் ஜோதி. இவர் சீனாவில் உள்ள ஐடி நிறுவனத்தில்  சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இந்த நிறுவனம் கரோனா வைரஸ் பாதிப்பு மிகுந்துள்ள ஹூவாய் பகுதியில் இயங்கி வருகிறது. இந்நிலையில் அநேம் ஜோதிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், இம்மாதம் 14ஆம் தேதி கர்னூலில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பல நாடுகளும் தங்களது நாட்டு மக்களை பத்திரமாக திரும்ப அழைத்து கொள்வதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

அதேபோன்று இந்தியாவும் சீனாவில் பணியிலிருக்கும் இந்தியர்களை திரும்ப வரவழைத்துக் கொள்ளும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதனால் வுகான் நகரில் இருந்த அநேம் ஜோதி, இந்தியா திரும்புவதற்கு தயாராக இருந்தார். ஆனால் விமானம் ஏறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அவருடைய உடல் நிலையை பரிசோதித்த மருத்துவர்கள், உங்களுக்கு காய்ச்சல் அதிகமாக இருப்பதால் உங்களை இந்தியாவுக்கு அனுப்ப முடியாது என திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்கள்.

இதனை சற்றும் எதிர்பாராத அநேம் ஜோதி, தாய் நாட்டிற்கு செல்லலாம் என ஆவலாய் இருந்தவருக்கு இது பேரதிர்ச்சியாக அமைந்தது. இதனிடையே இம்மாதம் 14ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கும் நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருக்கும் அந்தப் பகுதியில் சிக்கித் தவிக்கும் தங்கள் மகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் அநேம் ஜோதியின் பெற்றோரை வாட்டி வதைத்து வருகிறது.

இதற்கிடையே அநேம் ஜோதி தன்னுடைய பெற்றோருக்கு சீனாவில் நிலவும் நிலை குறித்து அனுப்பியுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் தனக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றாலும், தன்னை இந்தியா செல்ல அனுமதிக்க மறுக்கின்றனர் என அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

CORONAVIRUS, WUHAN, ANNEM NAGA JYOTHI, SOFTWARE ENGINEER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்