‘கொரோனாவால்’ தயக்கமா?... ‘இனி’ கவலையில்லாம ‘ஆர்டர்’ பண்ணுங்க... ‘ஸ்விக்கி’ அறிமுகம் செய்துள்ள புதிய ‘வசதி’...
முகப்பு > செய்திகள் > இந்தியாபிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி கொரோனா பரவாமல் இருக்க எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால், அது பரவுவதற்கான வாய்ப்புகளை குறைக்க உதவும் சில செயல்திறன் மிக்க நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம். எங்களுடைய வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் பார்ட்னர்களின் பாதுகாப்புக்கே நாங்கள் எப்போதும் முன்னுரிமை கொடுப்போம். முதலாவதாக, எங்களுடைய டெலிவரி பார்ட்னர்களுக்கு தொடர்ந்து சுவாசம் சார்ந்த சுகாதாரம், கைகளை முறையாக கழுவுவது மற்றும் வைரஸ் தாக்கத்துடன் தொடர்புடைய அறிகுறிகளை அடையாளம் காண்பது ஆகியவை குறித்து தொடர் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
ஒரு டெலிவரி பார்ட்னர் குறிப்பிட்ட வைரஸ் உடன் தொடர்புடைய அறிகுறிகளைக் கண்டால், உடனடியாக எங்களை அணுகும்படியும், மருத்துவ நிபுணரை அணுகும்படியும் கூறியுள்ளோம். அவருக்கு எங்களுடைய நிறுவனத்தின் மெடிக்கல் பார்ட்னர்கள் மூலம் இலவச மருத்துவ ஆலோசனையை வழங்குகிறோம். மேலும் கொரோனா வைரஸ் சார்ந்த எந்தவொரு அறிகுறி இருந்தாலும், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் காலத்திற்கு அவர்களை அவர்களே தனிமைப்படுத்திக் கொள்ளும்படியும் நாங்கள் அறிவுறுத்தி உள்ளோம். அத்துடன் அவர்களுக்கு நிதி ரீதியாகவும் நாங்கள் ஆதரவளிக்க தயாராக உள்ளோம்.
முன்னரே உணவுப் பொருட்களைக் கையாளும்போது சிறந்த சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை அவர்கள் அறிந்துள்ளபோதும், தற்போது கூடுதலாக கண்காணிப்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். அத்துடன் ஒருவேளை உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றாலோ அல்லது நீங்கள் விரும்பினாலோ உங்களுக்கான உணவை வீட்டு வாசலிலேயே வைத்துவிடுமாறு டெலிவரி செய்பவரை நீங்கள் கேட்டுக்கொள்ளலாம். இது ஆன்லைனில் கட்டணம் செலுத்துபவர்களுக்கு மட்டுமே பொருந்தும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
‘இதே போன்று தான்’.. ‘கடந்த 10 வருடங்களாக..’!.. ரஜினிகாந்த் அரசியல் முடிவு குறித்து சீமான் கருத்து..!
தொடர்புடைய செய்திகள்
- ‘இவங்க’ எல்லாம் ‘இல்லாம’ எப்படி?... மத்திய அரசின் ‘திடீர்’ அறிவிப்பால்... ‘ஐபிஎல்’ போட்டிகளுக்கு எழுந்துள்ள ‘புதிய’ சிக்கல்...
- ‘நடத்தலாமா வேணாமா? ரசிகர்கள் வருவாங்களா வரமாட்டாங்களா?’.. கொரோனாவால் கூடி விவாதிக்கும் ஐபிஎல் ஆட்சிமன்ற குழு!
- ‘மூச்சுத் திணறல், காய்ச்சல் இருக்கா’... ‘பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட’... ‘பழனி தண்டாயுதபாணி கோவில் நிர்வாகம்’!
- ‘வரவேண்டாம்.. வீட்ல இருந்தே வேலை செய்ங்க!’.. கொரோனா பரவாமல் இருக்க’.. ‘முதல் ஆளாக முடிவெடுத்த சென்னை நிறுவனம்!
- ‘என்ன நடந்தாலும் ஊருக்கு போக மாட்டேன்..’. ‘இது என் வாழ்கையில எடுத்த தைரியமான முடிவு...’ சீனாவில் தொடர்ந்து படிக்க விரும்பும் சிங்கப் பெண்...!
- 'கொரோனா' வைரஸ்னா என்ன ? ... 'நாங்க' எப்படி 'பாதுகாப்பா' இருக்குறது ? ... குழந்தைகளின் கேள்விகளுக்கு விடை சொல்லும் 'வாயு' காமிக்ஸ் !
- 'என்ன நடந்தாலும், எப்போது நடந்தாலும்... 'இது' மட்டும் மாறாது... ஆனால்'... கொரோனாவுக்கு சவால் விடும் தேவசம் போர்டு!... சபரிமலை பக்தர்கள் அதிர்ச்சி!
- ‘இத’ மட்டும் பண்ணினா ‘கடும்’ நடவடிக்கை... அதிகரித்து வரும் ‘கொரோனா’ பாதிப்பால்... ‘எச்சரித்துள்ள’ சுகாதாரத்துறை அமைச்சர்...
- வீடியோ: '5 மீட்டர் தூரத்தில் இருந்தாலே தெரிஞ்சுடும்’... ‘காய்ச்சல் இருக்கா இல்லையானு’... ‘பிரத்யேக ஹெல்மெட் தயாரித்த நிறுவனம்’!
- '28 நாட்களுக்கு கோயிலுக்கு வராதீங்க!'... சிறப்பு தரிசன டிக்கெட்டுகளில் அதிரடி மாற்றங்கள்!... கொரோனா எதிரொலியால்... 'திருப்பதி தேவஸ்தானம்' தீவிரம்!